மல்யுத்த வீரர்களுக்கு நீதி கிடைக்க உறுதுணையாக நிற்போம்: முதல்வர் டிவிட்

சென்னை: மல்யுத்தம் வீரர்களுக்கு நீதி கிடைக்க உறுதுணையாக நிற்போம் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். இதுகுறித்து தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று வெளியிட்டுள்ள சமூக வலைத்தளப்பதிவில் கூறியிருப்பதாவது: இந்தியாவுக்கே பெருமை தேடித்தந்த நமது மற்போர் (மல்யுத்தம்) வீரர்கள் பாலியல் துன்புறுத்தலுக்குள்ளாகி, சுயமரியாதையை காப்பாற்றிக் கொள்ள போராடும் நிலைக்கு தள்ளப்பட்டிருப்பதை காண நெஞ்சம் பதைக்கிறது. அவர்களை திமுக மாநிலங்களவை உறுப்பினர் புதுகை அப்துல்லா இன்று (நேற்று) திமுக சார்பில் சந்தித்து ஆதரவை தெரிவித்துள்ளார். நமது மற்போர் வீரர்களுக்கு நீதி கிடைக்க உறுதுணையாக உடன் நிற்போம். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

The post மல்யுத்த வீரர்களுக்கு நீதி கிடைக்க உறுதுணையாக நிற்போம்: முதல்வர் டிவிட் appeared first on Dinakaran.

Related Stories: