சிதம்பரம் பகுதியில் செங்கல் தயாரிக்கும் பணி தீவிரம்

சிதம்பரம் : சிதம்பரம் சுற்றுவட்டார பகுதியில் செங்கல் தயாரிப்பு பணியில் தொழிலாளர்கள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே உள்ள வடக்கு மாங்குடி, தெற்கு மாங்குடி, சிவபுரி, அகரநல்லூர், சிவாயம், வல்லம்படுகை, கனகரப்பட்டு, பெராம்பட்டு, திட்டுக்காட்டூர் உள்ளிட்ட பல பகுதிகளில் கோடை வெயிலின் தாக்கத்தை பொருட்படுத்தாமல் செங்கல் உற்பத்தி செய்யும் தொழிலில் பணியாளர்கள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

தற்போது கட்டுமான பணிகள் அதிக அளவில் ஆங்காங்கே நடைபெற்று வருகிறது. மேலும் கட்டிட தொழிலாளர்களும் பெருமளவில் வெளிநாட்டிற்கு செல்லாமல் உள்நாட்டிற்குள்ளேயே செங்கல் தயாரிக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இங்கு தயாரிக்கப்படும் செங்கல்கள் பல்வேறு பகுதிகளுக்கு விற்பனை செய்யப்படுகிறது. செங்கல் தயாரிக்க கோடைக்காலமே சிறந்ததாகும். வெயில் அதிகமாக இருக்கும் ஏப்ரல், மே ஆகிய மாதங்களை கணக்கில் கொண்டு தொழிலாளர்கள் அதிகளவில் செங்கல் தயாரிக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். தற்போது வெயில் சுட்டெரிப்பதால் இப்பகுதிகளில் செங்கல் தயாரிக்கும் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது.

The post சிதம்பரம் பகுதியில் செங்கல் தயாரிக்கும் பணி தீவிரம் appeared first on Dinakaran.

Related Stories: