இலத்தூர் அரசு பள்ளியில் ரூ.17.32 லட்சத்தில் புதிய வகுப்பறை சிவபத்மநாபன் திறந்து வைத்தார்

 

செங்கோட்டை: செங்கோட்டை அருகே இலத்தூர் அரசு நடுநிலைப்பள்ளிக்கு முன்னாள் எம்எல்ஏ அபுபக்கரின் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ.17.32 லட்சத்தில் புதிய வகுப்பறை கட்டிடம் கட்டும் பணி முடிந்து திறப்பு விழா நேற்று நடந்தது. நிகழ்ச்சிக்கு செங்கோட்டை ஒன்றிய செயலாளரும், புதூர் பேரூராட்சி தலைவருமான ரவிசங்கர் தலைமை வகித்தார். தலைமை ஆசிரியர் சூர்யாகலா வரவேற்றார். தென்காசி தெற்கு மாவட்ட திமுக செயலாளர் சிவபத்மநாபன் புதிய வகுப்பறை கட்டிடத்தை திறந்து வைத்து பேசினார். தென்காசி எம்.பி தனுஷ்குமார், தலைமை செயற்குழு உறுப்பினர் ஆறுமுகசாமி,

செங்கோட்டை யூனியன் தலைவர் திருமலைசெல்வி, இலத்தூர் ஊராட்சி தலைவர் முத்துலட்சுமி ரமேஷ், துணைத்தலைவர் சண்முகவேலு, இலத்தூர் திமுக செயலாளர் சாமி, ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் சுரேஷ்குமார், பள்ளி மேலாண்மை குழு தலைவர் ரேவதி ஆகியோர் குத்துவிளக்கு ஏற்றினர். நிகழ்ச்சியில் செங்கோட்டை ஒன்றிய துணைத்தலைவர் கலா, ஆய்க்குடி பேரூராட்சி தலைவர் சுந்தர்ராஜன், மாவட்ட துணைச்செயலாளர் கனிமொழி, பொதுகுழு உறுப்பினர் சாமித்துரை, பொருளாளர் ஷெரீப், செங்கோட்டை ஒன்றிய துணைச்செயலாளர் வாசுதேவன், அவைத்தலைவர் கட்டாரி பாண்டியன், மாவட்ட ஆதிதிராவிடர் நல அணி அமைப்பாளர் பரமசிவன், கடையநல்லூர் முன்னாள் ஒன்றிய செயலாளர் காசிதர்மம் துரை, தொண்டரணி இசக்கி பாண்டியன், இளைஞரணி சந்தோஷ், சுரேஷ், சலீம், மகாராஜ பாண்டியன், பாலா, இசக்கிதுரை உட்பட பலர் பங்கேற்றனர்.

The post இலத்தூர் அரசு பள்ளியில் ரூ.17.32 லட்சத்தில் புதிய வகுப்பறை சிவபத்மநாபன் திறந்து வைத்தார் appeared first on Dinakaran.

Related Stories: