அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் உறுதி: திமுகவை யாராலும் அச்சுறுத்த முடியாது

சென்னை: திமுகவை யாராலும் அச்சுறுத்த முடியாது என்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தார். சென்னை கிண்டி அண்ணா பல்கலைக்கழகத்தில் நாட்டு நலப்பணி திட்டத்தின் விருதுகள் வழங்கும் விழாவில், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நேற்று கலந்துகொண்டு நாட்டு நலப்பணி திட்ட மாணவர்களுக்கு விருதுகளை வழங்கினார். பின்னர் நிருபர்களிடம் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கூறியதாவது: கலைஞர் பிறந்தநாள் விழாவில் கிண்டி பன்னோக்கு மருத்துவமனை திறப்பு விழாவிற்கு குடியரசு தலைவரை அழைக்க முதல்வர் டெல்லி சென்றுள்ளார். ஒரு வாரத்தில் செய்தியாளர்களை சந்திப்பேன் என கூறிய அண்ணாமலையை ஏன் பத்திரிகையாளர்கள் கேள்வி கேட்கவில்லை. அண்ணாமலை குறித்தும் பாஜ குறித்தும் வெளியான ஆடியோவிற்கு என்ன விளக்கம் அளித்தார்கள். அதுகுறித்து செய்தியாளர்கள் என்ன கேள்வி எழுப்பினீர்கள்.

வருமான வரித்துறை சோதனை மூலம் திமுகவை எப்போதும் அச்சுறுத்த முடியாது. இதுவரை நடந்த சோதனைகளில் யார் மீதாவது வழக்கு போடப்பட்டு உள்ளதா, யாரையாவது கைது செய்துள்ளார்களா, நடவடிக்கை எடுத்துள்ளார்களா, யார் மீதும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. என் மீது ஏதாவது எப்.ஐ.ஆர். போட்டு இருக்கிறார்களா, எதுவும் இல்லையே. திமுகவை யாரும் வாழ்த்துவதில்லை. அவ்வப்போது குற்றச்சாட்டு தான் தெரிவித்துக் கொண்டே இருப்பார்கள். நாங்கள் அதைப்பற்றி கவலைப்படவில்லை. திமுக எப்போதும் குற்றச்சாட்டுகளை தகர்த்தெறிந்து பணியாற்றி வருகிறது. ஐ.டி. ரெய்டுகளால் திமுக அஞ்சவில்லை. நேற்று முன்தினம் கர்நாடகாவில் தமிழ்த்தாய் வாழ்த்தை அவமரியாதை செய்த அண்ணாமலையை ஏன் யாரும் கேள்வி கேட்கவில்லை. இவ்வாறு அவர் கூறினார்.

The post அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் உறுதி: திமுகவை யாராலும் அச்சுறுத்த முடியாது appeared first on Dinakaran.

Related Stories: