15ம் நூற்றாண்டை சேர்ந்த அரண்மனையை காணவில்லை ஐஏஎஸ் அதிகாரிக்கு நோட்டீஸ்: டெல்லி லஞ்ச ஒழிப்பு துறை அதிரடி

புதுடெல்லி: தென்கிழக்கு டெல்லியில் லஜ்பத் நகர் அருகே ஜல் விகார் பகுதியில் 15ம் நூற்றாண்டை சேர்ந்த ஒரு அரண்மனை சிதிலமடைந்து இருந்தது. டெல்லி குடிநீர் வாரியத்தின் கட்டுப்பாட்டில் இருந்து வந்த இந்த நினைவுச்சின்னத்தை ஒன்றிய தொல்லியல் துறையிடம் ஒப்படைப்பதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டு வந்தது. இந்தநிலையில் அந்த நினைவுச்சின்னத்தை இடித்து அதில் குடிநீர் வாரியத்தின் முதன்மை செயல் அதிகாரிக்கான அரசு பங்களா கட்டப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. பழமை வாய்ந்த நினைவுச்சின்னம் இடிக்கப்பட்டதற்கு பல்வேறு அரசியல் கட்சிகளிடம் இருந்து கடும் எதிர்ப்புகள் கிளம்பியுள்ளன. இந்த நிலையில் நினைவுச்சின்னம் இடிக்கப்பட்டது குறித்து விளக்கம் அளிக்ககோரி மூத்த ஐஏஎஸ் அதிகாரி உதித் பிரகாஷ் ராய் மற்றும் குடிநீர் வாரியத்தில் பணியாற்றும் 5 பொறியாளர்களுக்கு மாநில லஞ்ச ஒழிப்புத்துறை நோட்டீஸ் அனுப்பி உள்ளது.

The post 15ம் நூற்றாண்டை சேர்ந்த அரண்மனையை காணவில்லை ஐஏஎஸ் அதிகாரிக்கு நோட்டீஸ்: டெல்லி லஞ்ச ஒழிப்பு துறை அதிரடி appeared first on Dinakaran.

Related Stories: