பாளையங்கோட்டை சிறைவளாகத்தில் ஒன்றரை ஏக்கர் நிலத்தில் வம்பன் 18 ரக உளுந்தை விதித்த சிறை கைதிகள்..!!

நெல்லை: நெல்லை பாளையங்கோட்டை சிறைவளாகத்தில் ஒன்றரை ஏக்கர் நிலத்தில் வீரியமிக்க வம்பன் 18 ரக உளுந்தை சிறை கைதிகள் விதைப்பதில் ஈடுபட்டனர். பாளையங்கோட்டை மத்திய சிறையில் கைதிகளின் வாழ்வாதாரத்திற்காக சிறை வளாகத்தில் உள்ள நிலத்தில் விவசாயம் செய்யப்படுகிறது. மொத்தமுள்ள ஒன்றரை ஏக்கர் நிலத்தில் வம்பன் 18 என்ற வீரிய உளுந்து விதை விதைக்கும் பணி தொடங்கப்பட்டுள்ளது.

பாபா அணு ஆராய்ச்சி மையத்தின் தொழில்நுட்ப உதவியுடன் மதுரை சிறை துறை டிஐஜி பழனி இதனை தொடங்கி வைத்தார். தண்டனை கைதிகள் முதற்கட்டமாக சுமார் ஒன்றரை ஏக்கர் நிலப்பரப்பில் விதைகளை விதைத்தனர். பேக்கரி வகை இனிப்புகள் செய்யும் கூடம் காகித கவர்கள் தயாரிக்கும் தொழிலும், தச்சு பட்டறை தொழில் கூடமும், கால்நடை வளர்ப்பும் பாளையங்கோட்டை சிறையில் நடைபெற்று வருகிறது. தோட்டப்பயிர்களும் அதாவது கத்தரிக்காய், கொத்தவரங்காய் போன்ற காய்கறிகளும் உற்பத்தி செய்யப்படுகின்றன.

The post பாளையங்கோட்டை சிறைவளாகத்தில் ஒன்றரை ஏக்கர் நிலத்தில் வம்பன் 18 ரக உளுந்தை விதித்த சிறை கைதிகள்..!! appeared first on Dinakaran.

Related Stories: