திருநாகேஸ்வரம் கோயில் முன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 11 பேர் கைது

 

திருவிடைமருதூர்: திருவிடைமருதூர் அருகே திருநாகேஸ்வரம் நாகநாத சுவாமி கோயில் ஊழல் முறைகேடுகளை கண்டித்து ஆர்ப்பாட்டம் செய்த இந்து மக்கள் கட்சியினர் 11 பேரை போலீசார் கைது செய்தனர். திருநாகேஸ்வரம் நாகநாத சுவாமி கோயில் நவக்கிரக தலங்களில் ராகு தலமாக போற்றப்படுகிறது. தினமும் ராகு கால நேரத்தில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் ராகு பகவானுக்கு பாலபிஷேகம் செய்து வழிபடுகின்றனர். இதனால் கோயிலுக்கு பல கோடி ரூபாய் வருவாய் வருகிறது.

இதற்கிடையில் கோயில் நிர்வாகத்தில் பல நிர்வாக முறைகேடுகள், அர்ச்சகர் நியமனம் போன்றவற்றில் ஊழல் நடப்பதாக பல்வேறு அமைப்புகள் தொடர்ந்து புகார் அளித்து வருகின்றன. மேலும் இந்து மக்கள் கட்சியினர் கோயில் ஊழியர்களிடம் தகராறு செய்ததாக வழக்கு பதிவு செய்துள்ளனர். எனவே காவல் துறையை கண்டித்தும், கோயில் ஊழல் முறைகேடுகளை கண்டித்தும் நேற்று கோயில் வாசலில் இந்து மக்கள் கட்சி மாநில இளைஞரணி பொது செயலாளர் குருமூர்த்தி தலைமையில் ஆர்ப்பாட்டம் செய்தனர். இதில் ஈடுபட்ட 11 பேரை திருநீலக்குடி போலீசார் கைது செய்தனர்.

The post திருநாகேஸ்வரம் கோயில் முன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 11 பேர் கைது appeared first on Dinakaran.

Related Stories: