முதுமலை தெப்பக்காடு பகுதியில் பூத்து குலுங்கும் மயில் கொன்றை மலர்கள்

 

ஊட்டி: கூடலூர் அருகே முதுமலை புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட தெப்பக்காடு பகுதியில் மைசூர் தேசிய நெடுஞ்சாலை மற்றும் மற்றும் மசினகுடி சாலையில் வளர்ப்பு யானைகள் முகாமினை ஒட்டி ஏராளமான கொன்றை மரங்கள் உள்ளன. முதுமலையில் அண்மையில் மழை பெய்த நிலையில் வனங்களில் பசுமை திரும்பியுள்ளது. இந்த சூழலில் தெப்பக்காடு பகுதியில் உள்ள மயில் கொன்றை மலர்கள் தற்போது பூத்து குலுங்குகின்றன. ஒருசேர பூத்து குலுங்குவதால் தெப்பக்காடு பகுதியில் இருந்து தரைப்பாலம் வரை உள்ள பகுதி செக்கச்சிவந்து காட்சியளிக்கிறது.

கோடை சீசனையொட்டி முதுமலை புலிகள் காப்பகத்தை காண வரும் சுற்றுலாப்பயணிகளை வரவேற்கும் வகையிலும் பார்வையாளர்களின் கண்களுக்கு விருந்தளிக்கும் வகையில் உள்ளது. சுற்றுலா பயணிகள் தங்களது வாகனங்களை நிறுத்திவிட்டு, பூக்களை பார்த்து ரசித்து, புகைப்படமும் எடுத்து மகிழ்கின்றனர். மயில் கொன்றை ஒரு பூக்கும் தாவரமாகும். இதை மயிற்கொன்றை என்றும், செங்கொன்றை என்றும் அழைக்கின்றனர். இதன் பூ பார்படோசு நாட்டின் தேசியப் பூவாகும். இது அலங்காரத்திற்காக வளர்க்கப்படுகிறது. இதுதவிர சரகொன்றை எனப்படும் மஞ்சள் நிற கொன்றை பூக்களும் புலிகள் காப்பகத்தின் பல இடங்களிலும் மலர்ந்துள்ளன.

The post முதுமலை தெப்பக்காடு பகுதியில் பூத்து குலுங்கும் மயில் கொன்றை மலர்கள் appeared first on Dinakaran.

Related Stories: