நாங்குநேரி, களக்காட்டில் சூறாவளி காற்றுடன் 1 மணி நேரம் கனமழை

 

களக்காடு,ஏப்.27: நாங்குநேரி, களக்காடு வட்டாரத்தில் கடந்த மார்ச் மாத தொடக்கத்தில் இருந்தே வெயில் வெளுத்து வாங்கி வருகிறது. இதனால் பகல் நேரங்களில் பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியே வர முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் நாங்குநேரி, களக்காடு சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த சில நாட்களாக அவ்வப்போது மழை பெய்து வருகிறது. இதனால் கோடை வெப்பத்தின் தாக்கம் சற்று குறைந்தது. இதனால் பொதுமக்களும் மழையினால் மகிழ்ச்சியடைந்தனர். இந்நிலையில் நேற்று பிற்பகல் 1 மணி முதல் 2 மணி வரை சுமார் ஒரு மணி நேரம் நாங்குநேரி, களக்காடு, மூலைக்கரைப்பட்டி, பரப்பாடி விஜயநாராயணம், மூன்றடைப்பு, திருக்குறுங்குடி மாவடி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் சூறைக் காற்றுடன் கனமழை பெய்தது. அப்போது பயங்கர சத்தத்துடன் இடி மின்னல் ஏற்பட்டது. இதன்காரணமாக அப்பகுதி முழுவதும் மின்தடை ஏற்பட்டது. இந்த மழையால் சாலைகளில் வாகனங்கள் செல்லும்போது முகப்பு விளக்கு எரியவிட்டவாறு சென்றன. மேலும் மழையுடன் சூறைக்காற்று வீசியதால் சாலையோரம் வாகனங்கள் நிறுத்தி வைக்கப்பட்டன. இந்த கனமழையால் நாங்குநேரி வட்டாரத்தில் உள்ள சாலைகள் மற்றும் தெருக்களில் மழை நீர் பெருக்கெடுத்து ஓடியது. கோடை மழை பெய்தால் வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழல் நிலவியது. இதனால் பொதுமக்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

மின்னல் தாக்கி மாடு பலி: நாங்குநேரி, களக்காடு சுற்றுவட்டாரத்தில் நேற்று பிற்பகலில் ஒரு மணி நேரம் இடி, மின்னலுடன் இடை விடாது மழை கொட்டி தீர்த்தது. இந்த மழையில் கூந்தன்குளத்தில் மின்னல் தாக்கியதில் அப்பகுதியை சேர்ந்த மாரிமுத்து என்பவருக்கு சொந்தமான பசு மாடு உயிரிழந்தது.

The post நாங்குநேரி, களக்காட்டில் சூறாவளி காற்றுடன் 1 மணி நேரம் கனமழை appeared first on Dinakaran.

Related Stories: