திருச்சி காவேரி மருத்துவமனையில் சிறுவனுக்கு சிறுநீரக உறுப்பு மாற்று சிகிச்சை

 

திருச்சி, ஏப்.26: திருச்சி காவேரி மருத்துவமனை கதிர்வீச்சு சிகிச்சையியல் துறை தலைவரும், முதுநிலை ஆலோசகருமான மருத்துவர் செந்தில்வேல் செய்தியாளர் சந்திப்பில் கூறியதாவது:
ஒரு சிறநீரகம் பழுதடைந்தும் வந்த கடலூர் மாவட்டத்தை சேர்ந்த 12 வயது சிறுவன் சிகிச்சைக்காக திருச்சி காவிரி மருத்துவமனைக்கு வந்தார். அவரை பரிசோதித்த சிறுநீரகவியல் துறைத் தலைவர் மருத்துவர் ராஜராஜன், சிறுநீரக பாதையியல் துறை தலைவர் செந்தில்குமார் ஆகியோர் தலைமையின் கீழ் சிறுநீரகவியல் துறை சிறப்பு நிபுணர் மருத்துவர் பாலாஜி மற்றும் சிறுநீர் பாதையியல் நிபுணர் மருத்துவர் சசிகுமார் உள்ளிட்ட மருத்துவர்கள் குழு, சிறுவனுக்கு சிறுநீரக உறுப்பு மாற்று சிகிச்சை செய்ய அறிவுறுத்தினோம்.

ஆனால் அச்சிறுவனுக்கு “O” ரத்த வகையும், தந்தைக்கு “A” ரத்த வகையும் இருப்பதால், இருவரின் ரத்த பிரிவுகளுக்கும் நேர் எதிராக இருந்தது. இருப்பினும் சிறுவனுக்கு தந்தையின் சிறுநீரகத்தை எடுத்து பொறுத்தலாம் என்று மருத்துவர்கள் குழு முடிவு செய்து. கடந்த ஜன.19ம் தேதி உறுப்பு மாற்று சிகிச்சை செய்யப்பட்டது. சாதாரணமாக திருச்சி காவேரி மருத்துவமனையில், 252 சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது. அதில் 48 பேருக்கு ரத்தம் பொறுத்தம் இல்லாதவர்களுக்கு செய்துள்ளோம். ஆனால் சிறுவனுக்கு சிறுநீரக உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை செய்தது இதுவே முதல்முறை. தமிழகத்திலும், தென்னந்திய அளவிலும் முதல்முறையாக நாம் செய்துள்ளோம் என்றார்.

The post திருச்சி காவேரி மருத்துவமனையில் சிறுவனுக்கு சிறுநீரக உறுப்பு மாற்று சிகிச்சை appeared first on Dinakaran.

Related Stories: