செய்யாறு: திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறில் உள்ள அறிஞர் அண்ணா அரசு கலைக் கல்லூரி எதிரில் ஆதிதிராவிடர் நலத்துறை கட்டுப்பாட்டில் உள்ள விடுதி உள்ளது. இங்கு 28 மாணவர்கள் தங்கி பயலுகின்றனர்.நேற்று முன்தினம் மாலை சீனியர் மாணவர்களான 8 பேர், தாங்கள் சொன்ன வேலைகளை ஜூனியர் மாணவர்கள் செய்யாததால் விடுதியில் உள்ள பெட்ஷீட்களை சாட்டையை போல் முறுக்கி 19 மாணவர்களை ஒருவர் பின் ஒருவராக நிற்க வைத்து சரமாரியாக அடித்துள்ளனர். இதனை ஒரு மாணவர் வீடியோ எடுத்துள்ளார். அது வாட்ஸ்அப் மற்றும் பேஸ்புக்கில் நேற்று வைரலாக பரவியது. இதையடுத்து கல்லூரி முதல்வர் கலைவாணி, சம்பந்தப்பட்ட 8 மாணவர்களையும் இன்று முதல் (நேற்று) கல்லூரி விடுதிக்குள் வரக்கூடாது எனவும், நாளை (இன்று) பெற்றோருடன் வரவேண்டும் என்று கூறி வீட்டுக்கு அனுப்பினார்.
The post கல்லூரியில் ராகிங் ஜூனியர்களுக்கு சீனியர்கள் சாட்டையடி appeared first on Dinakaran.
