லம்போர்ஹினி உருஸ் எஸ்

லம்போர்ஹினி உருஸ் எஸ் கார் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதில் 3,999 சிசி டிவின் டர்போ வி8 பெட்ரோல் இன்ஜின் உள்ளது. இது அதிகபட்சமாக 657 பிஎச்பி பவரையும் 850 என்எம் டார்க்கையும் வெளிப்படுத்தும். ஆல் வீல் டிரைவ் கொண்டது. 3.5 நொடிகளில் மணிக்கு 305 கி.மீ வேகத்தை எட்டும். ஷோரூம் விலையாக சுமார் ரூ.4.18 கோடி என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. உருஸ் பர்பார்மண்டேவுடன் ஒப்பிடுகையில் ரூ.4 லட்சம் குறைவு. ஸ்போர்ட்டியான தோற்றத்தை வழங்கும் வகையில் பம்பர்கள் மாற்றி அமைக்கப்பட்டுள்ளன.

முழுமையான டிஜிட்டல் இன்போமெயின்மென்ட் சிஸ்டம், 8 ஏர்பேக்குகள், டிரைவர் அசிஸ்ட் சிஸ்டம் உள்ளி்ட்ட, லர்போர்ஹினி பர்மாமெண்டேயில் உள்ள சில அம்சங்கள் இதிலும் இடம் பெற்றுள்ளன. இந்தக் கார் போர்ஷே கயானே டர்போ ஜிடி, ஆஸ்டான் மார்டின் டிபிஎக்ஸ் 707 மற்றும் சமீபத்திய வரவான பிஎம்டபிள்யூ எக்ஸ்எம் ஆகியவற்றுக்கு போட்டியாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

The post லம்போர்ஹினி உருஸ் எஸ் appeared first on Dinakaran.

Related Stories: