திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதி பாடாலூர் அருகே கண்ணப்பாடி மகா மாரியம்மன் கோயில் தேர் வெள்ளோட்டம்

பாடாலூர்: பாடாலூர் அருகே கண்ணப்பாடி  மகா மாரியம்மன் கோயில் தேர்வெள்ளோட்டம் திரளான பக்தர்கள் வடம் பிடித்து இழுத்தனர். பெரம்பலூர் மாவட்டம் ஆலத்தூர் தாலுகா கண்ணப்பாடி கிராமத்தின் உள்ள  மகா மாரியம்மன் கோயிலுக்கு சொந்தமான தேர் கடந்த 1997ம் ஆண்டு வரை திருவிழாவின் போது சுவாமி எழுந்தருளி உலா வந்தது. இந்நிலையில் நிதி நிலமையின் காரணமாக அதன்பிறகு தேரோட்டம் நடைபெற வில்லை.

இந்நிலையில் கடந்த 26 வருடங்ளாக பராமரிப்பு இல்லாமல் இருந்த தேரை சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் முடிவு செய்தனர். அதன்படி ரூ.11 லட்சம் செலவில் புனரமைக்க முடிவு செய்து, புனரமைப்பு பணிகள் கடந்த 4 மாதங்களுக்கு முன் முடிவடைந்தது. தேரின் அனைத்து வேலைகளும் முடிவுற்ற நிலையில் நேற்று தேரின் வெள்ளோட்டம் நடைபெற்றது. இதையொட்டி நேற்று காலை சுவாமி, அம்பாளுக்கு பால், பன்னீர், இளநீர், சந்தனம் உள்பட பல்வேறு பொருட்களை கொண்டு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது.

பின்னர் மலர்களை கொண்டு அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. வெள்ளோட்டத்தை தொடர்ந்து புனரமைக்கப்பட்ட தேரின் முன்பு தீர்த்த குடங்களை வைத்து சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டது. பின்னர் பக்தர்கள் வடம் பிடித்து தேர் இழுத்தனர். இதில் சுற்றுப்பகுதிகளில் இருந்து திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். தொடர்ந்து பக்தர்கள் அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை கண்ணப்பாடி கிராம பொதுமக்கள் செய்திருந்தனர்.

 

The post திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதி பாடாலூர் அருகே கண்ணப்பாடி மகா மாரியம்மன் கோயில் தேர் வெள்ளோட்டம் appeared first on Dinakaran.

Related Stories: