ரயில் உபயோகிப்பாளர்கள் வலியுறுத்தல் நாகப்பட்டினம் வடக்கு ஒன்றியத்தில் திமுகவில் புதிதாக 4020 பேர் சேர்ப்பு

கீழ்வேளூர்: நாகப்பட்டினம் மாவட்டம் நாகப்பட்டினம் வடக்கு ஒன்றிய திமுக சார்பில் பாக நிலை முகவர்கள், பாக நிலை உறுப்பினர்கள் மற்றும் ஒன்றிய செயல்வீரர்கள் கூட்டம் சிக்கல்பத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு ஒன்றிய அவைத் தலைவர் பாண்டியன் தலைமை வகித்தார். செயலாளர் சிக்கல் ஆனந்த் வரவேற்றார். நாகை தொகுதி பார்வையாளரும், மாநில சுற்று சூழல் அணி துணைச் செயலாளர் ரஞ்சன்துரை முன்னிலை வகித்தார். கூட்டத்தில் நாகப்பட்டினம் மாவட்ட திமுக செயலாளரும், தமிழ்நாடு மீன் வளர்ச்சிக் கழக தலைவருமான கவுதமன் கலந்து கொண்டு, நாகப்பட்டினம் வடக்கு ஒன்றியத்தில் முதற்கட்டமாக 4020 பேர் புதிதாக சேர்க்கப்பட்டதிற்கான படிவத்தை பெற்றுக்கொண்டு சிறப்புரை ஆற்றினார். கூட்டத்தில் ஒன்றியக்குழு தலைவர் அனுசியா, மாவட்ட பொறியாளர் அணி அமைப்பாளர் செந்தில், ஒன்றிய துணைச் செயலாளர்கள் வேணுகோபால், முகமதுஜமால், செம்மலர், ஒன்றிய பொருளாளர் ராமச்சந்திரன் மற்றும் பாக நிலை முகவர்கள், பாக நிலை உறுப்பினர்கள் உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள், கிளை செயலாளர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

The post ரயில் உபயோகிப்பாளர்கள் வலியுறுத்தல் நாகப்பட்டினம் வடக்கு ஒன்றியத்தில் திமுகவில் புதிதாக 4020 பேர் சேர்ப்பு appeared first on Dinakaran.

Related Stories: