அட்சய திருதியை முன்னிட்டு நெல்லையப்பர் கோயிலில் குபேர மகாலட்சுமி ஹோமம்

நெல்லை: அட்சய திருதியை முன்னிட்டு நெல்லை டவுன் சுவாமி நெல்லையப்பர் கோயிலில் குபேர மஹாலட்சுமி ஹோமம் நடந்தது. தமிழகத்தில் உள்ள பிரசத்திபெற்ற சிவாலயங்களில் நெல்லை டவுன் நெல்லையப்பர் கோயில் உள்ளிட்ட 3 கோயில்களில் குபேர லிங்க சன்னதி அமைந்துள்ள. 7ம் நூற்றாண்டில் இக்கோயிலில் திருஞானசம்பந்தர் இறைவனை போற்றி பாடிய திருநெல்வேலி பதிகத்தில் நெல்லையப்பர் சன்னதியில் 2ம் பிரகாரத்தில் கிழக்கு திசை நோக்க அருள்பாலிக்கும் குபேர லிங்க சன்னதியில் நீங்காத செல்வம் நிறைகின்ற அட்சயதிருதியை பற்றி கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது. இத்தகைய வரலாற்றுச்சிறப்புமிக்க குபேர லிங்க சன்னதியில் நேற்று காலை சிறப்பு தனாகர்ஷண குபேர மகாலட்சுமி ஹோமம் நடந்தது. இதில் பெண்கள் உள்ளிட்ட பக்தர்கள் திரளாகப் பங்கேற்று தரிசனம் செய்தனர். இதையொட்டி காலை 9.30 மணிக்கு குபேர லிங்கத்திற்கு சிறப்பு அபிஷேகமும் அதைத்தொடர்ந்து அலங்கார தீபாராதனையும் மற்றும் சிறப்பு அர்ச்சனைகளும் நடைபெற்றன. ஏற்பாடுகளை கோயில்் செயல் அலுவலர் அய்யர் சிவமணி செய்திருந்தார்.

The post அட்சய திருதியை முன்னிட்டு நெல்லையப்பர் கோயிலில் குபேர மகாலட்சுமி ஹோமம் appeared first on Dinakaran.

Related Stories: