கொலிஜியம் ஒரு புதிர் கிரண் ரிஜிஜு கருத்து

இடாநகர்: ‘கொலிஜியம் நடைமுறை என்பது ஒரு புதிர். அது குறித்து கருத்து எதையும் சொல்ல விரும்பவில்லை’ என ஒன்றிய சட்டத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு தெரிவித்துள்ளார். உச்ச நீதிமன்றம் மற்றும் உயர் நீதிமன்றங்களுக்கு நீதிபதிகளை, உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி தலைமையிலான கொலிஜியம் அமைப்பு தேர்வு செய்து, ஒன்றிய அரசுக்கு பரிந்துரை செய்து வருகிறது. கொலிஜியம் நடைமுறை விஷயத்தில் உச்சநீதிமன்றத்துக்கும், ஒன்றிய அரசுக்கும் மோதல் போக்கு நீடித்து வருகிறது. இந்த நடைமுறை குறித்து ஒன்றிய சட்டத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு பல்வேறு கடுமயைான விமர்சனங்களை முன்வைத்து வருகிறார்.

இந்நிலையில், அருணாச்சலபிரதேச மாநிலத்தில் 4ஜி தொழில்நுட்ப சேவையை அளிப்பதற்கான 254 செல்போன் கோபுரங்களை அர்ப்பணிக்கும் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. இதில், சட்ட அமைச்சர் கிரண் ரிஜிஜு கலந்து கொண்டு பேசினார். அப்போது அவரிடம் உயர் நீதிமன்றம், உச்ச நீதிமன்றங்களுக்கு கொலிஜியம் பரிந்துரைத்த நீதிபதிகள் நியமனம் செய்யப்படாமல் நிலுவையில் இருப்பது குறித்து நிருபர்கள் அவரிடம் கேள்வி எழுப்பினர். இதற்கு பதிலளித்த கிரண் ரிஜிஜு, “கொலிஜியம் நடைமுறை என்பது ஒரு புதிர் போன்றது. அதுகுறித்து எந்த கருத்தையும் சொல்ல விரும்பவில்லை” என்று தெரிவித்தார்.

The post கொலிஜியம் ஒரு புதிர் கிரண் ரிஜிஜு கருத்து appeared first on Dinakaran.

Related Stories: