மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி கல்லூரியில் டிஎன்பிஎஸ்சி, யுபிஎஸ்சி பயிற்சி மையம்: தாளாளர் திறந்து வைத்தார்

மதுராந்தகம்: மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி பொறியியல் கல்லூரியில் ரூ.20 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட டிஎன்பிஎஸ்சி, யுபிஎஸ்சி பயிற்சி மையத்தை கல்லூரி தாளாளர் கோ.ப.செந்தில்குமார் திறந்து வைத்தார். செங்கல்பட்டு மாவட்டம், மேல்மருவத்தூரில் 38 ஆண்டுகளுக்கும் மேலாக செயல்பட்டு வரும் ஆதிபராசக்தி பொறியியல் கல்லூரியில் நேற்று காலை டிஎன்பிஎஸ்சி மற்றும் யுபிஎஸ்சி தேர்வுகளில் பங்கேற்கும் விதமாக ரூ.20 லட்சம் மதிப்பிலான பயிற்சி மையத்தை கல்லூரி தாளாளர் கோ.ப.செந்தில்குமார் திறந்து வைத்தார்.

தமிழ்நாடு அரசு ஒன்றிய அரசு தேர்வுகளில் மாணவர்கள் கலந்து கொண்டு வெற்றி பெறும் வகையில் இந்த மையம் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த மையத்தில் இரண்டாம் ஆண்டு தொடங்கி மாணவர்கள் தினமும் இரண்டு மணி நேரம் கல்வி பயிலும் வகையில் ஏராளமான புத்தகங்கள் பல்வேறு நிறுவனங்களின் வினாடி – வினா தொகுப்புகள் ஆகியவை வைக்கப்பட்டுள்ளன. மேலும், மாணவர்களுக்கு ஏற்படக்கூடிய சந்தேகங்களை உடனுக்குடன் தீர்த்து வைக்க பேராசிரியர்கள் மற்றும் புகழ் பெற்ற நிறுவனங்களின் பயிற்சியாளர்கள் இந்த மையத்தில் கலந்து கொண்டு பயிற்சி அளிக்க இருக்கின்றனர்.

இதன் மூலமாக ஏராளமான மாணவ – மாணவிகள் பயன்பெறுவார்கள். மேலும், இந்த கல்வியாண்டில் இந்த கல்லூரியின் வளாக தேர்வில் பல மாணவர்கள் சிடிஎஸ், டிசிஎஸ், ஜாஸ்மின், இன்போடெக், இன்டெல் பாட் நிறுவனங்களில் ஆண்டு வருமானம் ரூ.2 லட்சம் முதல் ரூ.8 லட்சம் வரை சம்பளத்தில் தேர்வு பெற்றுள்ளனர் என கல்லூரி நிர்வாகத்தினர் தெரிவித்தனர். இந்நிகழ்ச்சியில், கல்லூரி முதல்வர் பேராசிரியர் ராஜா, டீன் ராமசாமி, நிர்வாக அலுவலர் சதானந்தம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

The post மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி கல்லூரியில் டிஎன்பிஎஸ்சி, யுபிஎஸ்சி பயிற்சி மையம்: தாளாளர் திறந்து வைத்தார் appeared first on Dinakaran.

Related Stories: