பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியில் 24 ரன்கள் வித்தியாசத்தில் பெங்களூரு அணி வெற்றி பெற்றது!

மொஹாலி: நடப்பாண்டின் ஐபிஎல் தொடரின் 27th போட்டியில் பெங்களூரு – பஞ்சாப் அணிகள் மோதின. இந்த போட்டியில் பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியில் 24 ரன்கள் வித்தியாசத்தில் பெங்களூரு அணி வெற்றி பெற்றது. மொஹாலியில் நடைபெற்ற இந்த போட்டியில் பெங்களூரு அணிக்காக விராட் கோலி தலைமை தாங்கினார். இந்த போட்டியில் டாஸ் வென்ற பஞ்சாப் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. இதன்படி பெங்களூரு அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக விராட் கோலி மற்றும் டூபிளசிஸ் ஆகியோர் களமிறங்கினர். விராட் கோலி மற்றும் டூபிளசிஸ் ஜோடி ஆரம்பம் முதலே அதிரடி காட்டியது. அபாரமாக ஆடிய இருவரும் அரைசதம் கடந்தனர்.

விராட் கோலி மற்றும் டூபிளசிஸ் ஜோடி முதல் விக்கெட்டிற்கு 137 ரன்கள் சேர்த்து அசத்தியது. விராட் கோலி 47 பந்துகளில் 59 ரன்களும், டூபிளசிஸ் 56 பந்துகளில் 84 ரன்களும் எடுத்து ஆட்டமிழந்தனர். இதையடுத்து களமிறங்கிய வீரர்கள் சொற்ப ரன்களை மட்டுமே எடுத்தனர். தமிழக வீரர் தினேஷ் கார்த்திக் 5 பந்துகளில் 7 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளார். தொடக்கத்தில் பெங்களூரு அணி 200 ரன்களை கடக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் இறுதியில் 4 விக்கெட்டுகள் இழப்பிற்கு 174 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது.

இதையடுத்து 175 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பஞ்சாப் அணி களமிறங்கியது. 20 ஓவர்கள் முடிவில் பஞ்சாப் அணி அனைத்து விக்கெட்களையும் இழந்து 150 ரன்கள் மட்டுமே எடுக்கமுடிந்தது. இதனால் பெங்களூரு அணி 24 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. பெங்களூரு அணி தரப்பில் அதிகபட்சமாக முகமது சிராஜ் 4 ஓவர்களில் 21 ரன்கள் மட்டுமே கொடுத்து 4 விக்கெட்களையும் எடுத்துள்ளார்.

The post பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியில் 24 ரன்கள் வித்தியாசத்தில் பெங்களூரு அணி வெற்றி பெற்றது! appeared first on Dinakaran.

Related Stories: