பாஜகவுக்கு வாக்களிக்காவிட்டால் மோடியின் ஆசீர்வாதம் விலகிவிடும் பாஜக தேசிய தலைவர் ஜே.பி நட்டா சர்ச்சை பேச்சு..!!

கர்நாடகா: பாஜகவுக்கு வாக்களிக்காவிட்டால் பிரதமர் மோடியின் ஆசீர்வாதம் விலகிவிடும் என்று பேசிய அக்கட்சியின் தேசிய தலைவர் ஜே.பி நட்டாவிற்கு காங்கிரஸ் கட்சி கடுமையான எதிர்ப்பை பதிவு செய்துள்ளது. கர்நாடக மாநிலம் ஹாவேரி நகரில் முதலமைச்சர் பசவராஜ் பொம்மை போட்டியிடும் தொகுதியில் பிரமாண்டமான போட்டி நடைபெற்றது. கூட்டத்தில் பேசிய பாஜக தேசிய தலைவர் ஜே.பி நட்டா பாரதிய ஜனதாவுக்கு வாக்களிக்காவிட்டால் மோடியின் ஆசீர்வாதம் விலகிவிடும் என்று குறிப்பிட்டார்.

பிரதமரின் ஆசீர்வாதம் தேவையென்றால் பாஜகவிற்கு அனைவரும் வாக்களிக்க வேண்டும் என்று வலியுறுத்தினார். இதற்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ள காங்கிரஸ் கட்சி கர்நாடாக வாக்காளர்களை நட்டா மிரட்டுகிறார் என்று சாடியுள்ளது. ஆன்மீகத்திற்கு ஒரு எல்லை உண்டு என்று டிவீட்டர் மூலம் கூறியுள்ள காங்கிரஸ் மூத்த தலைவர் ஜெயராம் ரமேஷ் எதற்காக கர்நாடக மக்களை மிரட்டுகிறீர்கள் என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

The post பாஜகவுக்கு வாக்களிக்காவிட்டால் மோடியின் ஆசீர்வாதம் விலகிவிடும் பாஜக தேசிய தலைவர் ஜே.பி நட்டா சர்ச்சை பேச்சு..!! appeared first on Dinakaran.

Related Stories: