சாலை பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்

திண்டுக்கல், ஏப்.20: தமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறை சாலை பணியாளர் சங்கம் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திண்டுக்கல் கலெக்டர் அலுவலகம் முன்பு நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.ஆர்ப்பாட்டத்திற்கு, மாவட்ட தலைவர் கணேசன் தலைமை வகித்தார். மாவட்ட துணை நிர்வாகிகள் முத்துப்பாண்டி, ஜெயபிரகாஷ், சக்திவேல், பாண்டி, மணியன் முன்னிலை வகித்தனர். மாவட்டச் செயலாளர் வேல்முருகன் விளக்க உரையாற்றினார். சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாவட்ட தலைவர் பார்த்தசாரதி பேசினார். ஆர்ப்பாட்டத்தில், 41 மாத பணி நீக்க காலத்தை பணிக்காலமாக அறிவித்திட வேண்டும். புதிய பென்ஷன் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும். தர ஊதியம் 1900 உயர்த்தி வழங்க வேண்டும்.

7500 மேற்பட்ட சாலை பணியாளர்கள் காலியிடங்களை நிரப்ப வேண்டும். அகவிலைப்படி நிலுவை, சரண்டர் விடுப்பு சம்பளங்கள் வழங்க வேண்டும். பொங்கல் போனஸ் ரூ.10000 வழங்க வேண்டும் என்பது உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினார். நிகழ்ச்சியில் தமிழ்நாடு கல்வித்துறை அலுவலக பணியாளர் சங்க மாவட்ட தலைவர் பூமி பாலன், தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாவட்ட துணை தலைவர் சார்லஸ் சேசுராஜ், தமிழ்நாடு அரசு ஊழியர் தெற்கு மண்டல இளைஞரணி செயலாளர் பொன் இளங்கோ உட்பட 50க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். மாவட்ட பொருளாளர் கார்மேகம் நன்றி கூறினார்

The post சாலை பணியாளர்கள் ஆர்ப்பாட்டம் appeared first on Dinakaran.

Related Stories: