விவிவி பெண்கள் கல்லூரியில் வைர விழா கட்டிடங்கள் திறப்பு

விருதுநகர், ஏப்.18: விருதுநகர் விவிவி பெண்கள் கல்லூரி வைர விழாவை முன்னிட்டு வைர விழா விடுதி மற்றும் தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கி டிஜிட்டல் லாபி திறப்பு விழா நடந்தது.விழாவுக்கு கல்லூரி செயலாளர் கோவிந்தராஜ பெருமாள் தலைமை வகித்தார். புரவலர் மகேந்திரன், தலைவர் பழனிச்சாமி, கூட்டுச் செயலாளர் லதா, பொருளாளர் ரவிசங்கர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். வைரவிழா விடுதி கட்டிடத்தை வருமான வரித்துறை முதன்மை ஆணையர் செல்வகணேஷ் திறந்து வைத்தார்.

தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கி புதிய பொழுது போக்கு கூடத்தை வங்கி நிர்வாக இயக்குனர் மற்றும் முதன்மை அதிகாரி கிருஷ்ணன் திறந்து வைத்து பேசுகையில், ‘பிற மாநில வங்கி பணி மற்றும் இதர மத்திய அரசு பணிகளுக்கு செல்லும் போது மொழி தடையாக உள்ளது. அதனால் படிக்கும் போது பிற மொழிகளையும் மாணவிகள் கற்க வேண்டும். படிக்கும் போதே சேமிக்கும் பழக்கத்தை வழக்கப்படுத்த வேண்டும். தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கி வாடிக்கையாளர்களுக்கு சேவை வழங்குவதில் நாட்டில் முன்னோடி வங்கியாக இருக்கிறது’ என்றார்.

வருமான வரித்துறை முதன்மை ஆணையர் செல்வகணேஷ் பேசுகையில், ணவியர் படிக்கும் போதே போட்டித் தேர்வுகளை எதிர்கொள்வதற்கான வழிமுறைகள் குறித்த விழிப்புணர்வு பெற வேண்டும். சிவில் சர்விஸ் தேர்வுகளை தமிழிலும் எழுதலாம். உலக வங்கி மற்றும் சர்வதே வழக்கறிஞர் தேர்வு, யுனிசெப் போன்ற நிறுவன தேர்வு எழுதி பணிகளில் சேரலாம் என்றார்.

விழாவில், கல்லூரி முதல்வர் மீனா ராணி, செந்திக்குமார நாடார் கல்லூரி செயலாளர் சர்ப்பராஜன், விவிவி முன்னாள் செயலாளர் ரவி சங்கர், கேவிஎஸ் மேனேஜிங் போர்டு செயலாளர் ராஜா உள்பட பலர் கலந்து கொண்டனர்.

The post விவிவி பெண்கள் கல்லூரியில் வைர விழா கட்டிடங்கள் திறப்பு appeared first on Dinakaran.

Related Stories: