தீ தொண்டு வாரவிழா

சேத்தியாத்தோப்பு, ஏப். 16: சேத்தியாத்தோப்பு தீயணைப்பு மீட்பு பணிகள் சார்பில் தீ தொண்டு நாள் வாரவிழா சேத்தியாத்தோப்பு குறுக்கு ரோட்டில் அமைந்துள்ள தனியார் கோயில் வளாகம் மற்றும் மிராளூர் கிராமத்தில் நடந்தது. இதில் தற்போது நிலவும் வெயிலின் தாக்கத்தினால் எதிர்பாராமல் ஏற்படும் தீ விபத்துகளில் இருந்து பொதுமக்கள், தங்களை காப்பாற்றி கொள்ள குடியிருப்புகள் மற்றும் நிறுவனங்களில் தீ தடுப்பு சாதனங்களை முறையாக பராமரித்து வந்தால் தீ விபத்துகளை தடுக்க முடியும்.

கோடை நாட்களில் ஏற்படும் தீ விபத்துகளை தடுக்க ஒவ்வொரு குடியிருப்புகளிலும் வீட்டின் முன் ஒரு வாளி மணல், ஒரு வாளி தண்ணீர் வைத்திருக்க வேண்டும் உள்ளிட்ட வாசகங்கள் அடங்கிய துண்டு பிரசுரங்களை பக்தர்கள் மற்றும் பொதுமக்களிடம் வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தினர். இந்த தீ தொண்டு வார விழாவானது இந்த மாதம் முழுவதும் நடைபெறும் என தெரிவித்தனர். சேத்தியாத்தோப்பு தீயணைப்பு நிலைய அலுவலர் அறிவழகன் தலைமையிலான தீயணைப்பு குழுவினர் கலந்து கொண்டனர்.

The post தீ தொண்டு வாரவிழா appeared first on Dinakaran.

Related Stories: