ஆதனூர் ஆரம்ப சுகாதார நிலையத்தில் கர்ப்பிணிகளுக்கு மாதாந்திர பரிசோதனை

பாடாலூர், ஏப்.16: பெரம்பலூர் மாவட்டம் ஆலத்தூர் தாலுகா ஆதனூர் கிராமத்தில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையம் உள்ளது. சுமார் 20 ஆண்டுகளுக்கு முன் தொடங்கப்பட்டு செயல்பட்டு வரும் இந்த சுகாதார நிலையத்திற்கு சுற்று வட்டார பகுதிகளான ஆதனூர், மதுரா குடிக்காடு, கொட்டரை, பிலிமிசை, கூத்தூர், நொச்சிகுளம், குறிஞ்சிப்பாடி, ராமலிங்கபுரம், ரசுலாபுரம், மேத்தால், சில்லக்குடி, காரைப்பாடி, ஜமீன் ஆத்தூர் மற்றும் பாலம்பாடி ஆகிய கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் நாள்தோறும் 100க்கும் மேற்பட்ட புற நோயாளிகளும், உள் நோயாளிகளும் சிகிச்சை பெற வந்து செல்கின்றனர்.

மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் வாரந்தோறும் செவ்வாய்க்கிழமைகளில் சுழற்சி முறையில் கர்ப்பிணி பெண்களுக்கு தனி கவனம் செலுத்தி மருத்துவ பரிசோதனை மற்றும் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் மேத்தால் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் மருத்துவ முகாமிற்கு மேத்தால் துணை சுகாதார நிலையத்திற்கு உட்பட்ட கிராமங்களான (ராமலிங்கபுரம், ரசுலாபுரம், மேத்தால், சில்லக்குடி, காரைப்பாடி, ஜமீன் ஆத்தூர் மற்றும் பாலம்பாடி) கிராமங்களில் இருந்து கர்ப்பிணிகள் பரிசோதனை செய்து சிகிச்சை பெற்று செல்கின்றனர்.

கர்ப்பிணிகள் பிரசவ பதிவு, ஸ்கேன், ரத்த பரிசோதனைகள், இதர பரிசோதனைகள், சத்து மாத்திரைகள் வழங்குதல் மற்றும் கர்ப்பிணிகளுக்கான ஆலோசனை வழங்குதல் போன்ற அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் கர்ப்பிணிகளுக்கு என்னென்ன சேவை கிடைக்குமோ அனைத்தும் இங்கு நடைபெறும் மாதந்தோறும் முகாமில் வழங்கி வருகின்றனர். இது மட்டுமல்லாமல் இதர நாள்பட்ட நோய்களுக்கான மாத்திரை வழங்குதல் மற்றும் ரத்த பரிசோதனைகளும் செய்யப்படுகிறது. மேலும் புதுமண தம்பதிகளுக்கு தேவையான ஆலோசனை வழங்குதல், 30 வயதுக்கு மேற்பட்ட பெண்களுக்கான கர்ப்பப்பை வாய் பரிசோதனையும் மேற்கொள்ளப்படுகிறது.

The post ஆதனூர் ஆரம்ப சுகாதார நிலையத்தில் கர்ப்பிணிகளுக்கு மாதாந்திர பரிசோதனை appeared first on Dinakaran.

Related Stories: