என்ன செய்தாலும் பைலட்டுக்கு காங்கிரஸ் வாய்ப்பு தராது: அமித் ஷா பரபரப்பு பேச்சு

பாரத்பூர்: ராஜஸ்தானின் பாரத்பூர் மாவட்டத்தில் நடந்த பா.ஜ பூத் கமிட்டி கூட்டத்தில் பங்கேற்று பேசிய ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித் ஷா, “பைலட் ஏதாவது காரணம் கூறி உண்ணாவிரதம் இருந்தாலும் அவருக்கான அரசு ஆளும் வாய்ப்பு கிடைக்காது. ஏனென்றால், காங்கிரஸ் கட்சியின் கஜானாவை நிரப்புவதில் அவரது பங்களிப்பு குறைவாகவே உள்ளது. ஆனால் முதல்வர் கெலாட்டின் பங்களிப்பு அதிகமாக உள்ளது.

கெலாட் அரசு ராஜஸ்தானை ஊழல் கூடாரமாக மாற்றி, மாநிலத்தை சுரண்டி வருகிறது. இந்த ஊழல் பணத்தில் அவர் காங்கிரசின் கஜானாவை நிரப்புகிறார். ராஜஸ்தானில் அடுத்த தேர்தலில் பாஜ தனிபெரும்பான்மையுடன் வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும். மக்களவை தேர்தலில் 25 தொகுதிகளை கைப்பற்றும்,’’ என்று தெரிவித்தார்.

ஊழல் முகத்திரையை கிழித்தெறியுங்கள்

கொல்கத்தாவில் பாஜ மூத்த தலைவர்கள் கூட்டத்தில் பேசிய அமைச்சர் அமித் ஷா, “கட்சியை அடிமட்டத்தில் இருந்து வலுப்படுத்த வேண்டும். திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் தவறான ஆட்சி, ஊழல்கள் குறித்து பேசுங்கள். ஆளும் திரிணாமுலை ஒன்றிணைந்து எதிர்த்து போராடுங்கள்,’’ என்று கூறினார்.

The post என்ன செய்தாலும் பைலட்டுக்கு காங்கிரஸ் வாய்ப்பு தராது: அமித் ஷா பரபரப்பு பேச்சு appeared first on Dinakaran.

Related Stories: