பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவிப்பு திமுக மகளிர், மீனவர் உள்ளிட்ட அணிகளுக்கு புதிய நிர்வாகிகள்: மீனவர் அணி துணை தலைவராக கே.பி.சங்கர், செய்திதொடர்பு துணை செயலாளராக கோவை செல்வராஜ் நியமனம்

சென்னை: திமுகவின் மகளிர், விவசாயம், மீனவர் உள்ளிட்ட அணிகளுக்கு புதிய நிர்வாகிகளை கட்சியின் பொதுச்செயலாளர் துரைமுருகன் நியமித்துள்ளார். திருவொற்றியூர் எம்எல்ஏ கே.பி.சங்கர் மீனவர் அணி துணைத் தலைவர், கோவை செல்வராஜ் செய்தித் தொடர்பு துணைச் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளனர். இதுகுறித்து, திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது: திமுக சட்ட விதிகளின்படி அணிகளின் துணைத் தலைவர்கள், இணை செயலாளர்கள், துணை செயலாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

முன்னாள் எம்.எல்.ஏ அங்கையர்கண்ணி மகளிர் அணி துணைச்செயலாளராகவும், எம்.ராஜகாந்தன், ஆர்.வரதன், நா.தமிழ்செல்வன், பி.விஜயகுமார், சி.காசி ஆகியோர் தொழிலாளர் அணி துணை செயலாளர்களாகவும், த.சித்தார்த்தன், சுப்பிரமணியன் விவசாய அணி துணைச் செயலாளராகவும், கணேஷ்குமார், ஆதித்தன் விவசாய தொழிலாளர் அணி துணைச் செயலாளர்களாகவும் நியமிக்கப்படுகிறார்கள்.

திருவொற்றியூர் எம்.எல்.ஏ கே.பி.சங்கர் மீனவர் அணி துணைத் தலைவரகவும், மனோகரன், ஆர்.பத்மநாபன் மீனவர் அணி துணைச் செயலாளர்களாகவும், ஜாகிர் உசேன் கலை இலக்கிய பகுத்தறிவு பிரிவு பேரவை அணி துணைச் செயலாளராகவும், ரா.தாமரைச்செல்வன் சட்டத்துறை இணைச்செயலாளராகவும், மருத்துவ அணி துணைச் செயலாளர்களாக எஸ்.ஏ.ரமேஷ், ஆர்.திலகவதி ஜெயராஜ், ராஜேஷ் பாபு, மன்சூர் அலிகான், செண்பகவிநாயகமும் நியமிக்கப்படுகிறார்கள்.

முன்னாள் எம்.எல்.ஏ. கோவை செல்வராஜ் செய்திதொடர்பு துறை துணைச் செயலாளராகவும், ரபி அகமது, மு.சாகுல்அமீது, சுபேர்கான் சிறுபான்மை நலஉரிமை பிரிவு துணைச் செயலாளர்களாகவும், வர்த்தகர் அணி இணைச் செயலாளராக உமரி சங்கர், அயலக அணி துணைச் செயலாளராக ஏ.பாபு, ஏ.கே.பூபதி, எஸ்.ராம்குமார், சி.செல்லதுரை அமைப்பு சாரா ஓட்டுநர் அணி துணைச் செயலாளர்களாகவும், ஆர்.கோபால்ராம், எஸ்.கார்த்திக், மு.வாசிம்ராஜா, சுரேஷ், மனோகரன், நிவேதாஜேசிகா, வே.கவுதமன் விளையாட்டு மேம்பாட்டு அணி துணைச் செயலாளர்களாகவும் நியமிக்கப்படுகிறார்கள். ஏற்கனவே நியமிக்கப்பட்டவர்களுடன் புதிதாக நியமிக்கப்பட்டுள்ளவர்கள் இணைந்து பணியாற்றுவார்கள். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

The post பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவிப்பு திமுக மகளிர், மீனவர் உள்ளிட்ட அணிகளுக்கு புதிய நிர்வாகிகள்: மீனவர் அணி துணை தலைவராக கே.பி.சங்கர், செய்திதொடர்பு துணை செயலாளராக கோவை செல்வராஜ் நியமனம் appeared first on Dinakaran.

Related Stories: