கமுதி அருகே அதிமுகவினர் ஆர்ப்பாட்டம்

கமுதி, ஏப்.13: கமுதி அருகே அச்சங்குளம் கிராமத்தில் ராமநாதபுரம் மாவட்ட கூட்டுறவு நூற்பாலை உள்ளது. இங்கு மாற்றுத்திறனாளி பெண் லட்சுமி(48) பணியாற்றி வந்தார். இவர் கடந்த மாதம் 31ம் தேதி வேலையை முடித்து விட்டு வந்த போது, மயங்கி விழுந்து உயிரிழந்தார். இதற்கு பணி சுமை தான் காரணம் என்று அண்ணா தொழிற் சங்கம் சார்பில் நேற்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் அண்ணா தொழிற்சங்க மாவட்டச் செயலாளர் பிரகாசம் தலைமை தாங்கினார். அச்சங்குளம் நூர் பாலை அண்ணா தொழிற்சங்க தலைவர் முத்துச்சாமி, செயலாளர் பாலமுருகன், பொருளாளர் சரத்குமார், முன்னாள் எம்எல்ஏ சதன்பிரபாகர் உட்பட 100க்கும் மேற்பட்ட அதிமுகவினர் கலந்து கொண்டனர்.

The post கமுதி அருகே அதிமுகவினர் ஆர்ப்பாட்டம் appeared first on Dinakaran.

Related Stories: