திமுக உறுப்பினர் சேர்க்கை முகாம்

சிவகங்கை, ஏப்.12: திருப்புவனம் அருகே அல்லிநகரத்தில் மேற்கு ஒன்றிய திமுக சார்பில் உறுப்பினர் சேர்க்கை முகாம் நடந்தது. ஒன்றிய செயலாளர் வசந்தி சேங்கைமாறன் தலைமை வகித்தார். மானாமதுரை சட்டமன்ற தொகுதி பொறுப்பாளர் தினேஷ், மாவட்ட துணை செயலாளர் சேங்கைமாறன் ஆகியோர் உறுப்பினர் சேர்க்கை படிவத்தை வழங்கினர். இந்நிகழ்ச்சியில் கிழக்கு ஒன்றிய செயலாளர் கடம்பசாமி, ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் தேவதாஸ், ஒன்றிய அவைத் தலைவர் இளங்கோவன், துணைச் செயலாளர் மகேந்திரன், சேகர், கிளைச் செயலாளர் சூரபிரகாஷ் மற்றும் கிளைக் கழக நிர்வாகிகள் மற்றும் திமுகவினர் கலந்து கொண்டனர்.

The post திமுக உறுப்பினர் சேர்க்கை முகாம் appeared first on Dinakaran.

Related Stories: