உடுமலை மாரியம்மன் கோயிலுக்கு பறவை காவடி, அலகு குத்தி வந்து பக்தர்கள் நேர்த்திக்கடன் நிறைவேற்றம்

உடுமலை,ஏப்.11: உடுமலை மாரியம்மன் கோயில் தேர் திருவிழா மார்ச் 28-ம் தேதி நோன்பு சாட்டுதலுடன் துவங்கியது. கடந்த 4ம் தேதி கம்பம் போடுதல், 7ம் தேதி கொடியேற்றம் நடந்தது.

நாளை அதிகாலை 4 மணிக்கு மாவிளக்கு, மாலை 3 மணிக்கு திருக்கல்யாணம் நடக்கிறது. இரவு 7.30 மணிக்கு அம்பாள் புஷ்ப அலங்காரத்துடன் திருவீதி உலா நடைபெறும். 13-ம் தேதி மாலை 4 மணிக்கு முக்கிய நிகழ்வான தேரோட்டம் நடக்கிறது. இதையொட்டி, தினசரி கோயிலுக்கு நூற்றுக்கணக்கான பக்தர்கள் வந்து வழிபட்டு செல்கின்றனர். கம்பத்துக்கு பெண்கள் நீர் ஊற்றி வழிபடுகின்றனர். இதன் ஒருபகுதியாக, நேற்று மாலை ஸ்ரீசபரிமலை சபரி பாட்டி உழவாரப் பணி பேரவை சார்பில் அலகு குத்தியும், பறவை காவடி எடுத்தும், முளைப்பாலிகை சுமந்தும் பக்தர்கள் பக்திப் பரவசத்துடன் கோயிலுக்கு ஊர்வலமாக வந்தனர். இதை மாவட்ட கலைஞர் பேரவை தலைவர் ராமசாமி துவக்கிவைத்தார். இதை ஏராளமானோர் பார்வையிட்டனர்.

The post உடுமலை மாரியம்மன் கோயிலுக்கு பறவை காவடி, அலகு குத்தி வந்து பக்தர்கள் நேர்த்திக்கடன் நிறைவேற்றம் appeared first on Dinakaran.

Related Stories: