பிற்படுத்தப்பட்ட சமுதாய பட்டியலில் கொங்கு வேளாளர் சமுதாயத்தை சேர்த்தது கலைஞர் பேனாதான்

புதுக்–கோட்டை : புதுக்–கோட்டை வடக்கு மாவட்ட திமுக பொதுக்–கூட்–டம் மற்–றும் நலத்–திட்ட உத–வி–கள் வழங்–கும் விழா நேற்று நடை–பெற்–றது. வடக்கு மாவட்ட திமுக செய–லா–ளர் செல்–ல–பாண்–டி–யன் தலை–மை–யில் நடந்–தது. கூட்–டத்–தில் திமுக துணை பொது செய–லா–ள–ரும் எம்–பி–யு–மான ஆ.ராசா கலந்து கொண்டு பேசி–ய–தா–வது: வாஜ்–பாய் பிர–த–ம–ராக இருந்–த–போது காவி–க–ளோடு திமுக கூட்–டணி வைத்–தி–ருந்–தது. அப்–போது கலை–ஞர் காவி–களை தனது கட்–டுப்–பாட்–டிற்–குள் வைத்–தி–ருந்–தார். ஆனால் தற்–போ–தைய முதல்–வர் மு.க.ஸ்டா–லி–னுக்கு முன்–னாள் எத்–தனை ஆபத்–துக்–கள் உள்–ளது என்–பதை யாரா–லும் மறுக்க முடி–யாது. ஆட்சி பொறுப்பு ஏற்று பின்–னர் கொரோனா உச்ச கட்–டத்–திற்கு இருந்து, ஆக்–ஸி–ஜன் தட்–டுப்–பாடு இருந்–தது. அதனை முதல்–வர் போக்–கி–னார்.

தேர்–த–லில் வாக்–கு–று–தி–கள் கொடுக்–கப்–பட்–டது, ஆட்சி பொறுப்பு ஏற்ற பின்–னர் வாக்–கு–று–தி–களை நிறை–வேற்றி விடு–வோம் என்ற நம்–பிக்கை இருந்–தது. ஆனால் கடந்த ஆட்–சி–கா–ரர்–கள் கஜா–னாவை காலி செய்து விட்–ட–னர் என்–பது தெரி–ய–வந்–தது. அதனை தற்–போது சீர் செய்து கொடுத்த வாக்–கு–று–த –யான 1000 ரூபாய் எங்–கள் உரிமை தொகை வழங்–கு–வ–தற்கு ஆணை–யிட்–டுள்–ளார். கலை–ஞ–ருக்கு 80 கோடி ரூபாய் மதிப்–பில் பேனா தேவையா என்று எடப்–பாடி கூறு–கி–றார், அவ–ர க்கு என்ன தகுதி உள்–ளது. இதனை கூறு–வ–தற்கு கொங்கு வேளா–ளர் சமு–தா–யத்தை பிற்–ப–டுத்–தப்–பட்ட சமு–தாய பட்–டி–ய–லில் இணைத்–தது கலை–ஞ–ரின் பேனா–தான், அதனை எடப்–பாடி மறந்–து–வி–டக் கூடாது.

பாரா–ளு–மன்–றத்–தில் இல்–லாத ஒரே பிர–த–மர் மோடி மட்–டும்–தான், பாரா–ளு–மன்ற ஜன–நா–ய–கத்தை பிர–த–மர் மோடி அவ–ம–திக்–கி–றார். இவ்–வாறு அவர் பேசி–னார். கூட்–டத்–தில் நகர செய–லா–ளர் செந்–தில், முன்–னாள் எம்–எல்–ஏக்–கள் பெரி–யண்–ணன் அரசு, கவி–தை–பித்–தன் தலைமை கழக நிர்–வா–கி–கள், மாவட்ட கழக நிர்–வா–கி–கள், தலைமை செயற்–குழு உறுப்–பி–னர்–கள், செயற்–குழு உறுப்–பி–னர்–கள், ஒன்–றிய நகர பேரூர் கழக செய–லா–ளர்–கள் மற்–றும் அணி–க–ளின் அமைப்–பா–ளர்–கள், துணை அமைப்–பா–ளர்–கள், உள்–ளாட்சி பிர–தி–நி–தி–கள், உள்–ளிட்ட பலர் கலந்–து–கொண்–ட–னர்.

The post பிற்படுத்தப்பட்ட சமுதாய பட்டியலில் கொங்கு வேளாளர் சமுதாயத்தை சேர்த்தது கலைஞர் பேனாதான் appeared first on Dinakaran.

Related Stories: