இலவச எலும்பு மூட்டு பரிசோதனை முகாம்

குமாரபாளையம்: குமாரபாளையத்தில் இலவச எலும்பு மூட்டு பரிசோதனை முகாம் நடைபெற்றது. ரோட்டரி சங்க தலைவர் பிரபாத் மகேந்திரன் தலைமை தாங்கி பேசினார். பொருளாளர் ஜீவா சித்தையன் வரவேற்றார். இதில் குமாரபாளையம் நகர்மன்ற தலைவர் விஜய்கண்ணன் முகாமை துவக்கி வைத்து பேசினார். மருத்துவர் நரேஷ் தனகோடி பேசுகையில், ‘மூட்டு எலும்புகளின் உறுதித்தன்மையை பரிசோதனை செய்து கொள்ள வேண்டும். தற்போதைய நிலையில் 60 வயது கடந்தவர்கள் லேசாக தடுக்கி விழுந்தால் கூட, எலும்பு முறிந்து விடுகிறது. இயற்கையான வெயிலில் உடலுக்கு தேவையான வைட்டமின் டி சத்து கிடைப்பதால், கிராமப்புறங்களில் உழைக்கும் விவசாயிகளுக்கு, எலும்பு முறிவு ஏற்படுவதில்லை. தினம் அரை மணி நேரமாவது வெயில் படுமளவு வேலைகளை செய்தால், எலும்பு முறிவில் இருந்து தப்பிக்கலாம் என அறிவுரை வழங்கினார். இந்த முகாமில் 120 பேருக்கு எலும்பு உறுதித்தன்மை, ரத்த அழுத்தம், சர்க்கரை அளவு பரிசோதனை செய்யப்பட்டு ஆலோசனைகள் வழங்கப்பட்டது. ரோட்டரி சங்க செயலாளர் சீனிவாசன் நன்றி கூறினார்.

The post இலவச எலும்பு மூட்டு பரிசோதனை முகாம் appeared first on Dinakaran.

Related Stories: