தி.கோடு தேவி கருமாரியம்மன்கோயில் கம்பம் விடும் நிகழ்ச்சி

திருச்செங்கோடு, ஏப். 9: திருச்செங்கோடு அடுத்த எட்டிமடைபுதூர் பகுதியில் பிரசித்தி பெற்ற தேவி கருமாரியம்மன் கோயில் ஆண்டு திருவிழா, கடந்த 28ம் தேதி பூச்சாட்டுதலுடன் தொடங்கியது. தினசரி அபிஷேக ஆராதனை, சக்தி அழைத்தல், திருவிளக்கு பூஜை, பொங்கல் வைத்தல் நடைபெற்றது. நேற்று முன்தினம் இரவு, மாவிளக்கு ஊர்வலம், வாண வேடிக்கையுடன், அம்மன் திருவீதி உலா நடந்தது. கம்பம் விடும் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. தேவி கருமாரியம்மன் கோயிலில் இருந்து கம்பம் பிடுங்கப்பட்டு, அதனை கோயில் பூசாரி தாங்கி வந்தார். பெண்கள் முளைப்பாரி எடுத்து வந்தனர். எஸ்என்டி ரோடு, கிழக்கு ரதவீதி தெற்கு ரதவீதி ஆகிய முக்கிய வீதிகள் வழியாக வந்த கம்பம், திருச்செங்கோடு பெரிய தெப்பக்குளத்தை அடைந்தது. கம்பத்திற்கு சிறப்பு பூஜை செய்யப்பட்ட பின் பூசாரியும், பக்தர்களும் தெப்பக் குளத்தில் கம்பத்தை விட்டனர்.நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் சுவாமி வேடமிட்டு ஆடிப்பாடி ஊர்வலமாக வந்தனர்.

The post தி.கோடு தேவி கருமாரியம்மன்

கோயில் கம்பம் விடும் நிகழ்ச்சி appeared first on Dinakaran.

Related Stories: