ராஞ்சி: ரூ. 2.5 கோடி பணமோசடி வழக்கில் நடிகை அமீஷா படேலுக்கு எதிராக ராஞ்சி நீதிமன்றம் பிடிவாரண்ட் உத்தரவு பிறப்பித்துள்ளது. பாலிவுட் சினிமா தயாரிப்பாளரான அஜய் சிங், கடந்த 2018ம் ஆண்டு மீயூசில் ஆல்பம் ஒன்றை தயாரிப்பதாக கூறி பாலிவுட் நடிகை அமீஷா படேலுக்கு பணம் கொடுத்தார். ஆனால் குறிப்பிட்ட நாளில் மீயூசிங் ஆல்பம் தயாரிக்கப்படவில்லை. இதற்கிடையே தான் கொடுத்த பணத்தை அமீஷா படேலிடம் அஜய் சிங் கேட்டார். ஆனால் பணத்தை தராமல் அமீஷா படேல் இழுத்தடித்து வந்தார். ஒருகட்டத்தில் இருவருக்கும் இடையிலான ஒப்பந்தத்தின் அடிப்படையில், இரண்டரை கோடி ரூபாய்க்கான காசோலையை கொடுத்தார்.
ஆனால் அந்த செக் பவுன்சர் ஆனது. இதற்கிடையே அமீஷா படேலின் கூட்டாளி குணால் கூமர் என்பவர், அஜய் சிங்குக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. மேற்கண்ட விவகாரம் தொடர்பாக நடிகை மற்றும் அவரது கூட்டாளி மீது ராஞ்சி நீதிமன்றத்தில் அஜய் சிங் வழக்கு தொடர்ந்தார். இவ்வழக்கின் விசாரணைக்கு ஆஜராகாமல் அமீஷா படேல் இருந்து வந்தார். அதனால் அமீஷா படேல் மற்றும் அவரது கூட்டாளி குணால் ஆகியோருக்கு எதிராக ராஞ்சி சிவில் நீதிமன்றம் பிடிவாரண்ட் பிறப்பித்துள்ளது. இந்த வழக்கின் அடுத்த விசாரணை வரும் 15ம் தேதி ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
The post ரூ.2.5 கோடி பணமோசடி வழக்கு; நடிகை அமீஷா படேலுக்கு பிடிவாரண்ட்: ஜார்கண்ட் நீதிமன்றம் அதிரடி appeared first on Dinakaran.
