தா.பழூர் சிவாலயத்தில் ரிஷப வாகனத்தில் சோமாஸ்கந்தர் வீதியுலா

தா.பழூர், ஏப்.7: அரியலூர் மாவட்டம் தா.பழூர் விசாலாட்சி அம்பாள் சமேத காசி விஸ்வநாத சுவாமி கோயிலில் 17 ம் ஆண்டு துவக்க விழாவை முன்னிட்டு காலையில் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. இதில் சுவாமி அம்பாளுக்கு மஞ்சள் பொடி, மாப்பொடி, திரவியப் பொடி, அருகம்புல் பொடி, பால், தயிர், தேன், சந்தனம், இளநீர் கரும்புச்சாறு உள்ளிட்ட பல்வேறு வாசனை திரவியங்கள் கொண்டு அபிஷேகம் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து மலர்களால் அலங்கரிக்கப்பட்டு மங்கள இசையுடன் மகா தீபாராதனை காட்டப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி அம்பாளை வழிபாடு செய்தனர்.

மாலை வேளையில் சிறப்பு அலங்காரத்தில் சோமாஸ்கந்தர் அம்பாளுடன் பக்தர்களுக்கு காட்சியளித்தார். இதில் சோமாஸ்கந்தர் அம்பாளுடன் பெரிய ரிஷப வாகனத்தில் வீதிஉலா நடைபெற்றது. இந்த வீதியுலா  விஸ்வநாத ஸ்வாமி கோயிலில் இருந்து வானவேடிக்கையுடன் புறப்பட்டு தா.பழூர் கடைவீதி மற்றும் முக்கிய வீதிகள் வழியாக வீதி உலா நடைபெற்றது.

அதில் கடைவீதியில் இருந்த ஏராளமான பக்தர்கள் வழிபாடு செய்தனர். ஏற்பாடுகளை பிரதோஷ வழிபாட்டு குழுவினர் செய்திருந்தனர்.

The post தா.பழூர் சிவாலயத்தில் ரிஷப வாகனத்தில் சோமாஸ்கந்தர் வீதியுலா appeared first on Dinakaran.

Related Stories: