அரசு, நகராட்சி மேல்நிலை பள்ளிகளில்183 உடற்கல்வி இயக்குநர் பணியிடங்கள்ஏப்.11ல் பணி நிரவல் கலந்தாய்வு

நாகர்கோவில், ஏப்.7: தமிழ்நாட்டில் அரசு, நகராட்சி மேல்நிலை பள்ளிகளில் உள்ள மாணவர்களின் எண்ணிக்கை அடிப்படையில் உடற்கல்வி இயக்குநர் நிலை 1 பணியிடங்களில் உபரியாக கண்டறியப்பட்ட 163 ஆசிரியர்களுக்கு ஏப்ரல் 11ம் தேதி பணி நிரவல் கலந்தாய்வு நடக்கிறது. பள்ளி கல்வி ஆணையர் அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கும் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது: தமிழ்நாட்டில் 3123 அரசு மேல்நிலை பள்ளிகளில் மொத்தம் 407 உடற்கல்வி இயக்குநர் நிலை 1 பணியிடங்கள் அனுமதிக்கப்பட்டுள்ளது. 11-12ம் வகுப்புகளில் 400 மாணவர்களுக்கு மேல் இருக்கும் பள்ளிகளுக்கு ஒரு உடற்கல்வி இயக்குநர் நிலை-1 பணியிடம் அனுமதிக்கப்பட்டுள்ளது. இந்த பள்ளிகளில் மாணவர்கள் எண்ணிக்கை அடிப்படையில் 11 மற்றும் 12ம் வகுப்புகளில் 400க்கும் குறைவாக உள்ள 163 பள்ளிகளில் உடற்கல்வி இயக்குநர் நிலை 1 ஆசிரியர்கள் பணி புரிந்து வருகின்றனர். அதே சமயம் 11 மற்றும் 12ம் வகுப்புகளில் 400க்கும் அதிகமான மாணவர்கள் உள்ள 183 பள்ளிகளில் உடற்கல்வி இயக்குநர் நிலை 1 ஆசிரியர்கள் இல்லாத நிலை உள்ளது.

மாணவர்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ளதின் அடிப்படையில் 183 உடற்கல்வி இயக்குநர் நிலை 1 கூடுதல் பணியிடங்கள் தேவை என கண்டறியப்பட்டுள்ள பள்ளிகளுக்கு அரசாணையின்படி உடற்கல்வி இயக்குநர் நிலை 1 ஆசிரியர்களுக்கு 11.4.2023 அன்று மாவட்டத்திற்குள் முதன்மை கல்வி அலுவலர்கள் மூலம் பணி நிரவல் கலந்தாய்வு நடத்திட வேண்டியுள்ளது. ஆசிரியருடன் உபரி என கண்டறியப்பட்ட உடற்கல்வி இயக்குநர் நிலை-1 ஆசிரியர்களுக்கு அந்தந்த மாவட்டத்திற்குள் உள்ள நிரப்பத்தகுந்த காலி பணியிடம் கூடுதல் தேவையுள்ள பள்ளிகளுக்கு பணி நிரவல் மாவட்டத்திற்குள் வருகின்ற ஏப்ரல் 11ம் தேதி அன்று இணையதளம் வாயிலாக கலந்தாய்வு நடைபெற உள்ளது. இவ்வாறு சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post அரசு, நகராட்சி மேல்நிலை பள்ளிகளில்

183 உடற்கல்வி இயக்குநர் பணியிடங்கள்

ஏப்.11ல் பணி நிரவல் கலந்தாய்வு
appeared first on Dinakaran.

Related Stories: