ராகுல்காந்தி எம்பி பதவி நீக்கம் பேரூராட்சி கூட்டத்தில் திமுக, காங். வெளிநடப்பு

காரைக்குடி, மார்ச் 28: ராகுல்காந்தியை எம்.பி பதவியில் இருந்து தகுதிநீக்கம் செய்ததை கண்டித்து காங்கிரஸ் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் மற்றும் அகிம்சைவழியில் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்நிலையில் காரைக்குடி அருகே பள்ளத்தூர் பேரூராட்சி கூட்டம் தலைவர் சாந்திசங்கர் தலைமையில் நேற்று நடந்தது. துணைத்தலைவர் ருக்மணி, செயல்அலுவலர் உமாமகேஸ்வரன் முன்னிலை வகித்தனர். கூட்டம் துவங்கியவுடன் காங்கிரஸ் உறுப்பினர்கள் கொத்தரிகருப்பையா, சோலைமலை, திமுக உறுப்பினர்கள் சரோஜா, வெள்ளையம்மாள், சுயேச்சை உறுப்பினர் முத்து ஆகியோர் ராகுல்காந்தியை எம்.பி பதவியில் இருந்து தகுதிநீக்கம் செய்ததை கண்டித்து வெளிநடப்பு செய்தனர்.

Related Stories: