சிவகங்கை அருகே பெண் போலீஸ் கணவரை வெட்டி வழிப்பறி செய்த இருவர் கைது: ஆயுதங்கள், நகைகள் பறிமுதல்

சிவகங்கை, மார்ச் 28: சிவகங்கை அருகே வழிப்பறியில் ஈடுபட்ட இருவரை போலீசார் கைது செய்தனர். சிவகங்கை அருகே மதுரை சாலை பகுதியில் கடந்த கடந்த 25ம் தேதி இரவு டூவீலரில் வந்த மதுரை வரிச்சியூரை சேர்ந்த செக்கடியான்(38), மழவராயனேந்தலை சேர்ந்த மகளிர் போலீஸ் புவனேஸ்வரியின் கணவர் மோகனசுந்தரேஸ்வரன்(35) ஆகியோரை வாளால் தாக்கி நகை மற்றும் செல்போன், பணத்தை மூன்று வாலிபர்கள் பறித்துச் சென்றனர். சிவகங்கையை சேர்ந்த சட்டக் கல்லூரி மாணவர் அரவிந்த்(23) என்பவரை வழி மறித்து விரட்டியதில் அவர் சாலையோர ஹோட்டல் முன்பு இருந்த போர்டில் மோதி காயமடைந்தார். அடுத்தடுத்து நடந்த இந்த சம்பவங்களால் சிவகங்கையில் இருந்து மதுரை செல்லும் வாகன ஓட்டிகள் அச்சமடைந்தனர்.

இந்நிலையில் இச்சம்பவத்தில் ஈடுபட்ட குற்றவாளிகளை கைது செய்ய சிவகங்கை டிஎஸ்பி சிபிசாய்சௌந்தர்யன் தலைமையில் இரண்டு தனிப்படை அமைக்கப்பட்டது. தனிப்படையினர் நடத்திய விசாரணையில் சிவகங்கை அருகே பில்லூர் கிராமத்தைச் சேர்ந்த ஜெயராமன்(எ)சந்தோஷ்(23) தலைமையிலான கும்பல் இந்த சம்பவத்தில் ஈடுபட்டது தெரியவந்தது. இதையடுத்து ஜெயராமன்(எ) சந்தோஷ், சிவகங்கை அருகே அலுபிள்ளைதாங்கி கிராமத்தைச் சேர்ந்த ஹரி கிருஷ்ணன்(20) ஆகிய இரண்டு பேரை கைது செய்தனர். இவர்களிடமிருந்து ஒரு வாள், 3 செல்போன், ஒன்றரை பவுன் தங்கசங்கிலி, ஒரு டூவீலரை பறிமுதல் செய்தனர். கொள்ளை சம்பவத்தில் தலைமறைவாக உள்ள பில்லூரை சேர்ந்த பாலமுருகனை தேடி வருகின்றனர்.

Related Stories: