மதுரையில் கீழே விழுந்த சலவை தொழிலாளி பலி

மதுரை, மார்ச் 28: மதுரை கரிமேடு இளந்ேதாப்பு முதல் தெருவை சேர்ந்தவர் குமரேசன் (45). சலவை தொழிலாளி. குடிப்பழக்கம் உடையவர். இந்நிலையில் குமரேசன் வீட்டில் கீழே விழுந்து விட்டதாக கூறி, இவரை உறவினர்கள் நேற்று அதிகாலையில் மதுரை அரசு மருத்துவமனைக்கு கொண்டு வந்தனர். அங்கு பரிசோதித்த டாக்டர்கள் குமரேசன் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதைடுத்து இவரது உடல் பிரேத பரிசோதனைக்காக பிணவறைக்கு கொண்டு செல்லப்பட்டது. இதுகுறித்து இவரது மனைவி சித்ரா அளித்த புகாரின் பேரில், கரிமேடு போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.

Related Stories: