கிருஷ்ணகிரி, மார்ச் 28: கிருஷ்ணகிரியில் கருங்கற்கள் கடத்திய 3லாரிகளை பறிமுதல் செய்து டிரைவர்கள், உரிமையாளர்களை போலீசார் தேடி வருகின்றனர். கிருஷ்ணகிரி கனிம வளத்துறை உதவி இயக்குனர் பொன்னுமணி மற்றும் அதிகாரிகள், கிருஷ்ணகிரி- ராயக்கோட்டை சாலையில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது மூங்கில்புதூர் பகுதியில் கேட்பாரற்று 2 லாரிகள் நின்றது. அந்த லாரியில் அதிகாரிகள் சோதனை செய்தபோது, கருங்கற்கள் கடத்தி வந்திருப்பது தெரிந்தது. பின்னர், அந்த 2 லாரிகளையும், அதிகாரிகள் பறிமுதல் செய்து கிருஷ்ணகிரி தாலுகா காவல்நிலையத்தில் ஒப்படைத்தனர். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர்.