பயிற்சி கல்லூரி அமைத்து தர கோரிக்கை

திருவில்லிபுத்தூர்: திருவில்லிபுத்தூரில் அகில இந்திய கிராம கோவில் பூசாரிகள் பேரவை 2 வது மாநாடு நடைபெற்றது. இந்த மாநாட்டிற்கு மத்கிருஷ்ண பிரேமை சுவாமிகள் தலைமை வகித்து பேசினார். மாவட்ட அமைப்பாளர் மாயாண்டி முன்னிலை வகித்து வரவேற்றார். சிவகங்கை மாவட்ட அமைப்பாளர் ரவிச்சந்திரன், மாநில இணை அமைப்பாளர் கண்ணன் ஆகியோர் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டனர். இந்த மாநாட்டில், பூசாரிகள் மந்திரம் கற்றுக்கொள்வதற்கு பயிற்சி கல்லூரி ஒன்று அமைத்து தர வேண்டும்.  60 வயது பூசாரிகள் ஓய்வூதியம் பெறுவதற்கு தடையாக இருக்கின்ற வருமானச் சான்றிதழை நீக்கப்பட வேண்டும். அனைத்து கோவில் பூசாரிகளையும், நல வாரிய உறுப்பினர்களாக பதிவு செய்து நலவாரிய அட்டை வழங்க வேண்டும். கோவில் பூசாரிகளுக்கு பூஜை செய்யும் கோயில் அருகிலேயே இலவசமாக வீட்டுமனை பட்டா வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வைக்கப்பட்டன. இந்த பூசாரிகள் மாநாட்டில் தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து முக்கிய நிர்வாகிகள் என 200க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

Related Stories: