கூப்பிடு பிள்ளையார் கோவில் கும்பாபிஷேக விழா

பல்லடம், மார்ச் 27: பல்லடம்  அருகேயுள்ள காரணம்பேட்டை, கோவை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில், கூப்பிடு  பிள்ளையார் கோவில் அமைந்துள்ளது. பழமையான இக்கோவில் புதுப்பிக்கப்பட்டு  கும்பாபிஷேகம்  நடைபெற்றது. இவ்விழா பேரூர் ஆதீனம் சாந்தலிங்க மருதாசல  அடிகளார், சிரவை ஆதீனம் ராமானந்த குமரகுருபர அடிகளார், தென்சேரிமலை  திருநாவுகரசர் மட ஆதீனம் முத்துசிவராமசாமி அடிகளார் மற்றும் கோடங்கிபாளையம்  ஆனந்தபுரி ஆதீனம் பழனிசாமி அடிகளார் ஆகியோர் தலைமையில் கும்பாபிஷேக விழா  நடைபெற்றது.

கும்பாபிஷேகத்தை முன்னிட்டு  வீரமாத்தி அம்மன் கோவிலில்  இருந்து தீர்த்த குடம் எடுத்து வரப்பட்டு, சிறப்பு அபிஷேக பூஜைகள் நடந்தன.  விநாயகருக்கு சிறப்பு அலங்கார பூஜை, தீபாரானை நடைபெற்றது. ஏராளமான  பக்தர்கள் பங்கேற்று வழிபட்டனர். ஆன்மிக சொற்பொழிவும் நடைபெற்றது.  அனைவருக்கும் நாள் முழுவதும் அன்னதானம் வழங்கப்பட்டது.

Related Stories: