விஷம் குடித்த டெய்லர் சாவு

மதுரை, பிப். 28: மதுரை பொட்டல்குளம் பொன்மேனி மெயின் ரோட்டை சேர்ந்தவர் தினேஷ்(33). டெய்லரான இவருக்கு திருமணமாகி குழந்தைகள் உள்ளனர். கருத்து வேறுபாடு காரணமாக தினேஷின் மனைவி பிரிந்து சென்றுவிட்டார். இதனால் மனமுடைந்த தினேஷ் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த மாடக்குளம் போலீசார் தினேஷ் உடலை மீட்டு மதுரை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.

 

Related Stories: