பால் வண்டி டிரைவரை தாக்கிய வாலிபர் கைது

தேன்கனிக்கோட்டை, மார்ச் 25: தேன்கனிக்கோட்டை அடுத்த அன்னியாளம் கிராமத்தை சேர்ந்தவர் கிரண் (20). தனியார் பால் கம்பெனிக்கு, சரக்கு வாகனம் மூலம் பால் ஏற்றிச்செல்லும் தொழில் செய்து வந்தார். இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு, அன்னியாளம் பகுதிக்கு பால் எடுக்க சென்ற போது, அங்கு மது போதையில் வந்த அப்பகுதியை சேர்ந்த மாதேஷ் (34) என்பவர், வண்டியை வேகமாக ஓட்டி சென்றதாக கூறி, கிரணிடம் தகராறு செய்து தாக்கியுள்ளார். இதில் காயமடைந்த கிரண், தேன்கனிக்கோட்டை அரசு மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டார். இது தொடர்பாக தேன்கனிக்கோட்டை போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் மாதேசை கைது செய்தனர்.

Related Stories: