திருப்பூர் மாவட்டத்தில் பிளஸ்-1 தேர்வை 9,818 பேர் எழுதினர் 513 பேர் ‘ஆப்சென்ட்’

திருப்பூர்:தமிழ்நாடு அரசுத் தேர்வுத்துறையால் நடத்தப்படும் பிளஸ்-1 பொதுத் தேர்வு கடந்த 14ம் தேதி தொடங்கியது. திருப்பூர் மாவட்டத்தில் 93 தேர்வு மையங்களில் 217 மேல்நிலைப் பள்ளிகளில் பயிலும் 24,556 மாணவ, மாணவியரும், 214 தனித்தேர்வர்களும் என மொத்தம் 24,770  பேர் தேர்வெழுத விண்ணப்பித்திருந்தனர். இதில் நேற்று நடந்த உயிரியல் தேர்வுக்கு 5,987 பேர் விண்ணப்பித்திருந்ததில், 5,837 பேர் எழுதினர். 150 பேர் எழுதவில்லை. தாவரவியல் தேர்வுக்கு 469 பேர் விண்ணப்பித்திருந்ததில், 431 பேர் எழுதினர். 38 பேர் எழுதவில்லை. வரலாறு தேர்வுக்கு 2,696 பேர் விண்ணப்பித்திருந்ததில் 2,403 பேர் எழுதினர். 293 பேர் எழுதவில்லை. வணிக கணிதம் மற்றும் புள்ளியியல் தேர்வுக்கு 934 பேர் விண்ணப்பித்திருந்ததில் 910 பேர் எழுதினர். 24 பேர் எழுதவில்லை. அலுவலக நிர்வாகவியல் தேர்வுக்கு 125 பேர் விண்ணப்பித்திருந்ததில் 119 பேர் எழுதினர். 6 பேர் எழுதவில்லை. அடிப்படை இயந்திர பொறியியல் தேர்வுக்கு 94 பேர் விண்ணப்பித்திருந்ததில் 92 பேர் எழுதினர். 2 பேர் எழுதவில்லை. ஜவுளி தொழில்நுட்பத் தேர்வுக்கு 26 பேர் விண்ணப்பித்திருந்தில் 26 பேரும் எழுதினர். ஆகமொத்தம்10,331 பேர் விண்ணப்பித்திருந்ததில் 9,818 பேர் எழுதினர். 513 பேர் எழுதவில்லை.

Related Stories: