கோரிக்கைகளை வலியுறுத்தி சாலை ஆய்வாளர்கள் சார்பில் தபால் அனுப்பும் போராட்டம்

உடுமலை: தமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறை திறன்மிகு உதவியாளர்கள் (சாலை ஆய்வாளர்கள்) சங்கத்தின் முடிவின்படி, தமிழ்நாடு அரசு நெடுஞ்சாலைத் துறையில் பணிபுரிந்து வரும் திறன்மிகு உதவியாளர்களின் நீண்ட நாள்  கோரிக்கைகள் நிறைவேற்றப்படாமல் நிலுவையில் இருந்து வருவதை விரைந்து நிறைவேற்றி தர வலியுறுத்தி  நெடுஞ்சாலைத்துறை அமைச்சருக்கு  தபால் அனுப்பும் போராட்டம் நேற்று நடந்தது. உடுமலைப நகர தலைமை தபால் நிலையத்தில் இருந்து சங்கத்தின் மாநில பொதுச் செயலாளர் சி.குருசாமி தலைமையில் கோட்டத் தலைவர் முருகேசன், செயலாளர் சிவசாமி மற்றும் முன்னணி உறுப்பினர் வடிவேல் ஆகியோர் கோரிக்கை விண்ணப்பங்களை தபால் மூலமாக அனுப்பி வைத்தனர். இதுபோன்று தமிழகத்தின் பிற மாவட்டங்களில் இருந்தும் சங்கத்தின் நிர்வாகிகள் மற்றும் முன்னணி உறுப்பினர்கள் துறையின் உயர் அலுவலர்களுக்கும் கோரிக்கை விண்ணப்பங் களை தபால் மூலமாக அனுப்பி வைத்துள்ளனர்.

Related Stories: