உலக தண்ணீர் தினம் ஊராட்சிகளில் கிராமசபை கூட்டங்கள்

பள்ளிப்பட்டு: திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் ஆல்பிஜான் வர்கீஸ் உத்தரவின் பேரில் உலக தண்ணீர் தினத்தை முன்னிட்டு  நேற்றுமுன்தினம் ஊராட்சிகளில் கிராமசபை கூட்டங்கள் நடந்தது. இதில், ஆர்.கே.பேட்டை ஒன்றியம் அம்மனேரி ஊராட்சி கொண்டாபுரம் காலனியில் நடைபெற்ற கிராமசபை கூட்டத்திற்கு ஊராட்சி மன்றத் தலைவர்  ஆர். கோவிந்த ரெட்டி தலைமை வகித்தார். கிராம பொதுமக்கள், இளைஞர்கள் ஆர்வத்துடன் கலந்துக்கொண்டனர். முழு சுகாதாரம், அனைவருக்கும் வீடு வழங்கும் திட்டம்,  மழைநீர் சேகரிப்பு,  தண்ணீர் சிக்கனம் குறித்து விவாதிக்கப்பட்டு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. ஊராட்சி மன்ற துணைத் தலைவர் கிருஷ்ணன், ஊராட்சி செயலாளர் கார்த்தி, வார்டு உறுப்பினர்கள், பொதுமக்கள் என பலர் கலந்துக்கொண்டனர்.

அய்யனேரி ஊராட்சி மன்றத் தலைவர்  ஜெயலலிதா சுதாகர் தலைமையில் கிராமசபை கூட்டம் நடைபெற்றது. இதேப்போல், அம்மையார்குப்பம் ஊராட்சி மன்றத் தலைவர் ஆனந்தி செங்குட்டுவன் தலைமையில் கிராமசபை கூட்டம் நடைபெற்றது. மழைநீர் சேகரிப்பு,  தண்ணீர் சிக்கனம் குறித்து விவாதிக்கப்பட்டு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. ஜனகராஜகுப்பம் ஊராட்சி மன்றத் தலைவர்  ராமசாமி தலைமையில் கிராமசபை கூட்டம் நடைபெற்றது. சந்திரவிலாசபுரம் ஊராட்சி மன்றத் தலைவர் வி.ஜி.மோகன் தலைமையில் நடைபெற்ற கிராமசபை கூட்டத்தில் பெண்கள் அதிக அளவில் பங்கேற்று தண்ணீர் சிக்கனம் குறித்து விழிப்புணர்வு பெற்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. பைவலசா ஊராட்சிமன்றத் தலைவர் நாகரத்தினம் தலைமையில் கிராமசபை கூட்டம் நடைபெற்றது.

Related Stories: