வருவாய்த்துறை ஊழியர்கள் சங்கத்தினர் போராட்டம்: வெறிச்சோடிய அலுவலகம்

திருப்பூர்: வருவாய்த்துறையில் உள்ள காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும். 4 ஆண்டுகளாக வெளியிடாத துணை ஆட்சியர் பட்டியலை வெளியிட வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழகம் முழுவதும் வருவாய்த்துறை ஊழியர்கள் சங்கத்தினர் நேற்று தற்செயல் விடுப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.  அதன்படி திருப்பூர் மாவட்டத்திலும் வருவாய்த்துறை ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதன் காரணமாக திருப்பூர் வடக்கு மற்றும் தெற்கு தாலுகா அலுவலகங்கள் என மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள தாலுகா அலுவலகங்கள் ஊழியர்கள் இன்றி வெறிச்சோடி காணப்பட்டது. இதுபோல திருப்பூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்திலும் பல்வேறு அலுவலகங்களில் ஊழியர்கள் இன்றி வெறிச்சோடி காணப்பட்டன. இதன் காரணமாக பல்வேறு சான்றிதழ்கள் உள்ளிட்ட தேவைகளுக்காக அரசு அலுவலகங்களுக்கு சென்ற பொதுமக்கள் பெரும் அவதியடைந்தனர்.

Related Stories: