சர்வதேச காடுகள் தின விழா

காவேரிப்பட்டணம்: கிருஷ்ணகிரி அரசு பெண்கள் கலை கல்லூரி, காவேரிப்பட்டணம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியுடன் இணைந்து சர்வதேச காடுகள் தினத்தை கொண்டாடியது. முன்னதாக மாணவிகளுக்கு மஞ்சப்பை விழிப்புணர்வு குறித்து பேச்சு மற்றும் கட்டுரைப்போட்டி நடத்தப்பட்டன. கல்லூரி முதல்வர் கோவிந்தராசு தலைமை தாங்கினார். காவேரிப்பட்டணம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி உதவி தலைமை ஆசிரியர் பவுன்ராஜ் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு, போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவிகளுக்கு பரிசுகளை வழங்கினார். கல்லூரி மாணவிகளுக்கு மஞ்சப்பை விழிப்புணர்வு துண்டு பிரசுரங்கள் மற்றும் மஞ்சப்பைகள் வழங்கப்பட்டன. தொடர்ந்து மஞ்சப்பை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வரும் காவேரிப்பட்டணம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளிக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது.

Related Stories: