ரசாயனம் கலந்த மருந்து தெளிப்பா பாசன வாய்க்காலில் செத்து மிதந்த மீன்கள்

கிருஷ்ணராயபுரம்: கிருஷ்ணராயபுரம் அருகே லாலாபேட்டையில் உள்ள பாசன வாய்க்காலில் மீன்கள் அதிகளவு செத்து மிதக்கிறது. கரூர் மாவட்டம், மாயனூர் காவிரி கதவணியில் இருந்து கட்டளை மேட்டு வாய்க்கால் மூலமாக கிருஷ்ணராயபுரம், மகாதானபுரம், லாலாபேட்டை, குளித்தலை வழியாக செல்கின்றது இதன் மூலம் ஆயிரத்துக்கு மேற்பட்ட விளைநிலங்கள் பயன் பெற்று வருகின்றது. மேலும் மாயனூர் காவிரி கதவணையில் இருந்து பாசன வாய்க்கால் மூலம் திறந்து விடப்படும் தண்ணீர் நிறுத்தப்பட்டுள்ளதால் பாசன வாய்க்காலில் ஆங்காங்கே தண்ணீர் தேங்கியுள்ளது. இதில் ஏராளமான மீன்கள் இருந்ததால் மீனவர்கள் மற்றும் பொதுமக்கள் வலை விரித்து மீன்களை பிடித்து சென்றனர்.

இந்நிலையில் லாலாபேட்டை பஸ் ஸ்டாப் பகுதியில் சில மர்ம நபர்கள் தண்ணீரில் உள்ள மீன்களை பிடிப்பதற்காக ரசாயனம் கலந்த மருந்துகளை தெளித்துள்ளனர். இதனால் ஆங்காங்கே ஏராளமான மீன்கள் செத்து மிதக்கிறது. அதிலிருந்து ஏற்படும் துர்நாற்றத்தால் பொதுமக்கள் செல்ல முடியாமல் தவித்து வருகின்றனர். செத்து மிதக்கும் மீன்களில் இருந்து ஏற்படும் துர்நாற்றத்தினால் காற்று மாசு படுவதோடு இதனால் வேறு ஏதும் நோய்கள் ஏற்படாதுவாறு உரிய நடவடிக்கை எடுக்குமாறு பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

Related Stories: