கிருஷ்ணராயபுரம் அருகே எண்ணும் எழுத்தும் கற்றல் நிகழ்ச்சி

கிருஷ்ணராயபுரம்: கரூர் மாவட்டம் கிருஷ்ணராயபுரம் அருகே பழைய ஜெயங்கொண்ட சோழபுரம் பேரூராட்சிக்கு உட்பட்ட லட்சுமணம்பட்டியில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் எண்ணும் எழுத்தும் நிகழ்ச்சி தலைமை ஆசிரியர் மகாலட்சுமி தலைமையில் நடைபெற்றது. தமிழக அரசு பள்ளி கல்வித் துறை மூலம் கொரோனாவுக்குப் பின் மாணவர்களின் கல்வி முன்னேற்றத்திற்காக பல திட்டங்களை முன்னெடுத்து செய்து வருகின்றது. அதில் ஒன்று, இரண்டு, மூன்றாம் வகுப்பு மாணவர்களுக்கு எண்ணும் எழுத்தும் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதில் எண்ணும் எழுத்து திட்டத்தின் மூலம் அரும்பு, மொட்டு, மலர் என்ற நிலைகளில் மாணவர்களை உருவாக்கப்பட்டு அவர்களை மேம்படுத்தும் வகையில் செயல்பட்டு வருகின்றன என கூறப்படுகிறது. இதன் மூலம் மாணவ மாணவிகளை கற்பிக்கப்படுவதால் அவர்கள் தமிழ், ஆங்கிலம் ,கணக்கு போன்றவை எளிதாகவும் ஆர்வத்துடனும் கற்றுக் கொள்கின்றனர் என கூறினார். மேலும் திட்டம் வரும் கல்வி ஆண்டில் நான்கு முதல் ஐந்தாம் வகுப்பு வரை விரிவு படுத்தப்பட உள்ளது எனவும் தெரிவித்தனர். மாணவர்களைக் கொண்டு எண்ணும் எழுத்தும் திட்டத்தின் செயல் விளக்கத்தினை பெற்றோர்களுக்கு ஆசிரியை ஆனந்தி விளக்கிக் கூறினார். நிகழ்ச்சியில் மாணவ மாணவிகளின் பெற்றோர்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர்.

Related Stories: