ரயிலில் கேட்பாரற்று கிடந்த 30 கிலோ கஞ்சா பறிமுதல்

திருப்பூர்: திருப்பூரில் ரயிலில் கேட்பாரற்று கிடந்த 30 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். ஜார்கண்ட் மாநிலம், தன்பாத்திலிருந்து கேரளா மாநிலம் ஆலப்புழா செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில் நேற்று காலை 7.50 மணிக்கு திருப்பூர் ரயில் நிலையம் 1ம் நடைமேடைக்கு வந்தது. ரயில்வே போலீசார் அந்த ரயிலில் ஏறி சோதனை மேற்கொண்டனர். அப்போது ரயிலின் பெட்டி ஒன்றில் கழிவறை அருகே கேட்பாரற்று வெள்ளை நிற சாக்குப்பை ஒன்று கிடந்துள்ளது. போலீசார் அந்த பையை கைப்பற்றி திறந்து பார்த்த போது அதில் 30 கிலோ கஞ்சா இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. கஞ்சாவை கடத்தி வந்தவர்களின் விவரம் தெரியவில்லை. இதையடுத்து கஞ்சா பையை ரயில்வே போலீசார் கைப்பற்றி பறிமுதல் செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: